வேப்பெண்ணை மற்றும் காதிசோப்பு தண்ணீரில் முழுமையாக கரைவதில்லை அதற்கு ஒரு தீர்வு.*
*செய்முறை:-*
இரண்டு பாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. பெரியதில் 1லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக தண்ணீரை சூடுசெய்ய வேண்டும்.சிறிய பாத்திரத்தில் 200ml வேப்பெண்ணை ஊற்றி அதில் 20 g காதிசோப்பு(சீவி போடவேண்டும்) சேர்க்க வேண்டும்.இதை தண்ணீர் சூடாகும் பாத்திரத்தில், தண்ணீரின் மேல் வைத்து கிளறிக்கொண்டே இருந்தால் சிறிது நேரத்தில் இரண்டும் ஒன்றாக கலந்துவிடும். பின்பு ஆறியபின் டப்பாவில் ஊற்றிவைத்து கொள்ளவேண்டும்.
ஒரு லிட்டருக்கு 10ml – 20ml கலந்து செடிகளுக்கு அடிக்கலாம்.முயற்சிசெய்து பாருங்கள், நன்றி.: