வேம்பின் பயன்கள்

வேம்பின் பயன்கள்
இந்த சீசனில் நிறைய வேப்ப பழங்கள் பழுத்து கீழே விழுகின்றது நாம் அவற்றை சேகரித்து அல்லது விற்கனை செய்பவர்களிடம் வாங்கலாம். வேப்ப விதையில் விவசாயத்திற்கு தேவையான பயன்கள் நிறைய உள்ளது அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
வேப்ப மரத்தில் பல்வேறு வகையான தாவர இரசாயன பொருட்கள் உள்ளது இவற்றில் முக்கியமானது
அசாடிராக்டின், நிம்பின், நிம்பிடின், நிம்பண்டையால், நிம்போலிடின், நிம்பியால், ஆகியவை இச்சத்துக்கள்
மூலப்பொருள் ஒரு கிலோ வேப்பங்கொட்டை பருப்பில் ஒரு கிராம் அசாடிராக்டின் உள்ளது.
வேம்பு சார்ந்த பொருட்களை பயிருக்கு தெளிப்பதன் மூலம் சுற்றுச் சூழுலுக்குத் தீங்கு விளைவிப்ப தில்லை. இயற்கை விரோதிகளான ஒட்டுண்ணி, இரைவிழுங்கி போன்ற நன்மை தரும் உயிரினங்களைப் பாதிப்பது இல்லை. நச்சுத்தன்மை பயிர்களில் தங்கி இருக்காது தேனீக்களின் செயல்பாடு பாதிப்படைவதில்லை.
புழுக்களை உண்ணும் பறவைகளுக்கும் பாதுகாப்பானது. பூச்சிகொல்லி மருந்து கொண்டு கட்டுப்படுத்த ஆகும் செலவை விட மிகக்குறைவு மருந்து தெளிப்பவரின் ஆரோக்கியத்திற்கு இடையூறு விளைவிக்காது
வேம்பின் பயன்கள்
சுற்று சூழல் பாதிப்படையாது
பூஞ்சாண நோயை கட்டுப்படுத்தும்
,நூற்புழுக்களையும் கட்டுப்படுத்தும்
அந்துப்பூச்சிகளை மலடாக்கும், முட்டைகளை பொறிக்க விடாமல் தடைசெய்யும் வேம்பின் வாசனையின் மூலம் பூச்சிகளை வரவிடாமல் செய்யும் தன்மையுடையது கசப்புத் தன்மை இருப்பதால் பூச்சிகளை உண்ணவிடாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது பூச்சிகள் சாப்பிடாலும் அவற்றை சீரணிக்க விடாமல் குமட்டச் செய்யும் ஆற்றல் உள்ளது புழுக்களை தோலுரிக்க விடாமல் தடுக்கும், புழுக்கள் இனவிருத்தி செய்வதை தடுக்கும் கூட்டுப்புழு மற்றும் புழுவின் வளர்ச்சியை தடுக்கும், நன்மை செய்யும் பூச்சிகளை பாதிக்காது
வேப்பங் கொட்டை கரைசல் தயாரித்தல்
ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டை தேவைப்படும் அவற்றை இடித்து நன்கு தூளாக்கி அவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுதும் ஊறவைக்க வேண்டும். பின்பு அவற்றை வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற விகிதத்தில் கலந்து ஒட்டு பசை சேர்த்து,10 லிட்டர் பசுமாட்டுக் கோமியம் சேர்த்து கலந்து தெளிக்கவும்.
கட்டுப்படும் நோய் : பாக்டீரியா நோய்கள்
நெல் பாக்டிரியா கருகல் நோய்
இலையுறைக் கருகல் நோய்
நெல் துங்ரோ வைரஸ் நோய் (குட்டைப்புல் நோய்)
தக்காளி இலைக்கருகல் நோய்,சாம்பல் நோய்
மிளகாய் இலை சுருட்டை நோய்
வேப்பம் புண்ணாக்கு சாறு
2 கிலோ வேப்பம் புண்ணாக்கை 10 லிட்டர் நீரில் கலந்து 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இக்கலவையை வடிகட்டி 100 மில்லி சோப்புக் கரைசலுடன் 100 லிட்டர் நீரில் கலந்து ஒரு ஏக்கர் பயிரில் தெளிக்கலாம்.
கட்டுப்படும் நோய்கள்
எலுமிச்சை சொறி நோய்
தக்காளி இலைப்புள்ளிநோய்
நெல் தோகை அழுகல் நோய்
மிளகாய் பழ அழுகல் நோய்
அனைத்து இடங்களிலும் வேம்பு வளர்க்கலாம் வேம்பிலிருந்து பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க நாம வயல் ஓரங்கள், தரிசு நிலங்களில் மற்ற இடங்களலும் வேம்பு வளர்த்து பயனபடுத்தலாம்
வேப்ப மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 50 கிலோ வேப்பங் கொட்டை கிடைக்கிறது அதில் 50 சதவீதம் வேப்ப எண்ணெய் கிடைக்கும் அனைத்து வகை பூச்சி, நோய்களையும் கட்டுப்படுத்தும், வேம்பில் கட்டுப்படுத்தப்படும் பூச்சிகளின் எண்ணிக்கை 123. மனிதர்களுக்கும் நல்லது ,

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories