#வேர்உட்பூசணம் ( ஆர்பஸ்குளர் மைக்கோரைசா) பயன்பாடு

#வேர்உட்பூசணம் ( ஆர்பஸ்குளர் மைக்கோரைசா) பயன்பாடு
அதிக மகசூல் பெற, மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்க
விவசாயிகளுக்கு வேம் தகுந்த நேரத்தில் நல்ல தரத்தில் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் கிராமப்புற பெண்கள் உற்பத்தி செய்து வருமானம் பெறும் நோக்கத்தில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வேம் ( ஆர்பஸ்குளர் மைக்கோரைசா) என்பது ஒர் உயிர் உரமாகும். இதில் குளோமஸ் சிகஸ்போரா மற்றும் ஸ்கிலிரோ சிஸ்டிஸ் என்று பல வகைகள் உண்டு பயிர்களுக்கு ஏற்றவாறு பயன்படுத் தப்படுகிறது.
வேம் மண்ணில் உள்ள பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது.
குறிப்பாக மணிச்சத்து, கந்தகச்சத்து, துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புச்சத்து போன்ற சத்துக்களை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கிறது.
வேம் வேர்களோடே இணைந்து, வேருக்குள் சென்று பயிர்களுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொடுக்கிறது.
நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
மண்ணில் உள்ள ஈரப்பதத்தின் மூலமாக பயிர்களுக்குத் தேவையான நீரிணை எடுத்துக் கொடுக்கிறது.
மண்வளத்தை அதிகரிக்கிறது
நீண்டநாட்கள் மண்ணில் பெருகி செடிகள் மற்றும் மரப்பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து மகசூல் உற்பத்தியை அதிகரிக்கிறது.
வேம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தொழில் நுட்பம் விவசாயிகளிடம் சென்றடையாததாலும் தரமற்ற வேம் சரியான சமையத்தில் கிடைக்காததாலும் இதன் பயன்பாடு விவசாயிகளிடத்தில் மிக குறைவாகவே உள்ளது.
வேமினை கரும்பு, தென்னை, வாழை, காப்பி, எலுமிச்சை, மிளகு, குச்சிக்கிழங்கு, மா, பலா, மற்றும் காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
நாற்றங்கால்
ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிராம் வேம் உரத்தை விதைபதற்கு முன் நாற்றங்காலில் கீழே 2-3 செ.மீ ஆழத்தில் இடவும்.
பாலுத்தீன் பையில் உள்ள நாற்றுக்களுக்கு ஒரு பைக்கு 10 கிராம் வேம் போடவும்
1000 கிலோ மக்கிய தொழுவுரத்தில் 10 கிலோ வேம் கலந்து பாக்கெட்டில் இடலாம்.
வளர்ந்த பயிர்களுக்கு
வளர்ந்த மரங்களுக்கு 50கிராம் முதல் 200 கிராம் வேமை வேர்பாகத்தில் இட்டு மண் அணைக்கவும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories