#வேர் உட்பூசணம் ( ஆர்பஸ்குளர் மைக்கோரைசா) உற்பத்தி மற்றும் பயன்பாடு

#வேர் உட்பூசணம் ( ஆர்பஸ்குளர் மைக்கோரைசா) உற்பத்தி மற்றும் பயன்பாடு
அதிக மகசூல் பெற, மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்க
விவசாயிகளுக்கு வேம் தகுந்த நேரத்தில் நல்ல தரத்தில் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் கிராமப்புற பெண்கள் உற்பத்தி செய்து வருமானம் பெறுவதற்கும் இக்கையேட்டில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வேம் ( ஆர்பஸ்குளர் மைக்கோரைசா) என்பது ஒர் உயிர் உரமாகும் இதில் குளோமஸ் சிகஸ்போரா மற்றும் ஸ்கிலிரோ சிஸ்டிஸ் என்று பல வகைகள் உண்டு.
வகைகள் பயிர்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படுகிறது.
வேம் மண்ணில் உள்ள பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது. குறிப்பாக மணிச்சத்து, கந்தகச்சத்து, துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புச்சத்து போன்ற சத்துக்களை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கிறது. வேம் வேர்களோடே இணைந்து, வேருக்குள் சென்று பயிர்களுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொடுக்கிறது. மற்றும் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. மண்ணில் உள்ள ஈரப்பதத்தின் மூலமாக பயிர்களுக்குத் தேவையான நீரிணை எடுத்துக் கொடுக்கிறது. மேலும் இது மண்வளத்தை அதிகரிக்கிறது நீண்டநாட்கள் மண்ணில் பெருகி செடிகள் மற்றும் மரப்பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து மகசூல் உற்பத்தியை அதிகரிக்கிறது.
வேம் பற்றிய விளிப்புணர்வு மற்றும் தொழில் நுட்பம் விவசாயிகளிடம் சென்றடையாததாலும் தரமற்ற வேம் சரியான சமையத்தில் கிடைக்காததாலும் இதன் பயன்பாடு விவசாயிகளிடத்தில் மிக குறைவாகவே உள்ளது. வேமினை கரும்பு, தென்னை, வாழை, காப்பி, எலுமிச்சை, மிளகு, குச்சிக்கிழங்கு, மா, பலா, மற்றும் காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
நாற்றங்கால்
ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிராம் வேம் உரத்தை விதைபதற்கு முன் நாற்றங்காலில் கீழே 2-3 செ.மீ ஆழத்தில் இடவும்.
பாலுத்தீன் பையில் உள்ள நாற்றுக்களுக்கு ஒரு பைக்கு 10 கிராம் வேம் போடவும் 1000 கிலோ மக்கிய தொழுவுரத்தில் 10 கிலோ வேம் கலந்து பாக்கெட்டில் இடலாம்.
வளர்ந்த பயிர்களுக்கு
வளர்ந்த மரங்களுக்கு 50கிராம் முதல் 200 கிராம் வேமை வேர்பாகத்தில் இட்டு மண் அணைக்கவும்.
உற்பத்தி செய்யும் முறை
தேவையான பொருட்கள்
1. இடம் 5 சென்ட்
2. சிமிண்ட் தொட்டி ( 4 அடி அகலம் 3அடி உயரமுள்ள
வட்டவடிவ தொட்டி
3. வெர்மிக்குளேட் ஐஏ கிரேடு
4. தாய்விதை – வுNயுரு –கோயமுத்தூர்
5. மக்காச்சோளம் அல்லது கேழ்வரகு விதை
6. 50 கிராம் யூரியா
7. கோழி வலை
8. தேவையான அளவு தண்ணீர்
உற்பத்தி முறை
வேம் உற்பத்திக்கு தேவையான வெர்மிகுளேட் ஐஏ வுயஅin ( தமிழ்நாடு கனிம வள ஆணையம் சென்னை) தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம். வெர்மிக்குளெட் வேம் உற்பத்தி செய்வதற்கு உண்ணதமான ஒரு பொருளாகும் ஏனெனில் இதில் வேறு எந்த கிருமிகளின் தாக்கமும் வளர்ச்சியும் இருக்காது.
1. ஒரு வட்டவடிவ சிமிண்ட் தொட்டியில் 200 கிலோ
வெர்மிக்குளேட்டை கொட்டவும். அதில் தேவையான அளவு
நீரை ஊற்றிக் கொள்ளவும்
2. அதன் மேற்பரப்பில் 10 கிலோ தாய்விதையினை பரப்பவும்
3. அதில் 10 X 2.5 செமீ என்ற இடைவெளியில் மக்காச்சோள
விதையோ அல்லது கேழ்வரகு விதையையோ விதைக்கவும்.
4. தினமும் தேவையான அளவு நீர் தெளித்து பாதுகாக்கவும்
5. மக்காச்சோளம் வளர்ந்த 15 முதல் 20 வது நாளில் ஒரு லிட்டருக்கு 10 கிராம் யூரியாவை கலந்து வேரில் ஊற்றவும்.
6. 30 வது நாளில் மக்காச்சோளத்தின் தண்டுப்பகுதியை நீக்கி
விட்டு (வேர் பாகத்தை நீக்கக் கூடாது)
7. மீண்டும் மக்காச்சோள செடியின் இடைவெளியில்
மக்காச்சோள விதை நடவும்
9. 60 ஆம் நாள் செடியின் மேல் பாகத்தை நீக்கி விட்டு வேரினை
ஒரு. இஞ்ச் சிறியதாக வெட்டி தொட்டியில் உள்ள வேம்
வளர்ந்த வெர்மிக்குளேட்டுடன் கலந்து விற்பனை செய்யவும்
உற்பத்தியின் போது செய்யக் கூடாதவை
1. அதிகமான அளவு நீர் தெளிக்கக் கூடாது
2. மழைகாலத்தில் நீர் தொட்டியில் தேங்காதவண்ணம்
மேற்பகுதியில் குறைந்த செலவில் கூரை
போட்டுக்கொள்ளலாம்
3. தொட்டியில் நீர் தேங்கினால் அதனை வெளியேற்றக் கூடாது
ஏனெனில் வேமின் தாய் விதை ( ஸ்போர் ) நீரின் மூலம்
வெளியேறிவிடும்
4. வெர்மிக்குளேட்டிள் வளரும் மக்காச்சோளபயிர்
காய்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும்
5. தொட்டியில் வெர்மிக்குளேட் நிரப்பும்போது பாதிதொட்டிக்கு
மட்டுமே நிரப்ப வேண்டும்.
6. மக்காச்சோள பயிரை கோழி, எலி, மற்றும் பறவைகள் ,
கால்நடைகள் தாக்காமல் பாதுகாகக்க வேண்டும்.
7. மக்காச்சோளப் பயிருக்கு அதிகமாக யூரியா பயன்படுத்தக்
கூடாது. ஏனெனில் அதிகம் பயன்படுத்தினால் செடி
கருகிவிடும்.
8. மக்காச்சோள விதையினை இரசாயன மருந்துகளால்
விதைநேர்த்தி செய்திருந்தால் அதனை நீர்விட்டு கழுவி பிறகு பயன்படுத்தலாம்
குறிப்பு
மக்காச்சோளம் மற்றும் கேழ்வரகு பயிரினை வேம் உற்பத்திக்கு பயன்படுத்தும் பொழுது அதிகமான வேர்கள் கிடைக்கும்.
தரம் பாராமரித்தல்
1. 60 நாட்களுக்கு பிறகு வேர்பகுதியினை எடுத்து வேரினைக் கழுவாமல் அதனை வுNயுரு அல்லது ஆளுளுசுகு க்கு அனுப்பி தரத்தினை சரிபார்த்துக் கொள்ளலாம் அப்படி சரிபார்த்துக் கொள்ளும் பொழுது வேரில் வேமின் வளர்ச்சி குறைந்தது 75 சதவீதம் இருக்கவேண்டும். அது வெர்மிக்குளேட்டில் 100 கிராமிற்கு 30 வேம் விதைகள் இருக்க வேண்டும். தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் மக்காச்சோள விதையையோ அல்லது கேழ்வரகு விதையையோ நடவு செய்து வேரின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்
2.வெர்மிக்குளேட்டின் ஈரப்பதம் 20 சதவீதமாக இருக்க வேண்டும்
3. இதனை 6 மாதத்திற்குள் விற்பனை செய்து நிலத்தில்
பயன்படுத்த வேண்டும்.
பயன்படுத்தும் பொழுது கவனிக்க வேண்டியவை
1. நிலத்தில் அடியுரமாக இடும்பொழுது மண்ணின் ஈரப்பதம்
சரியான அளவில் இருக்க வேண்டும்
2. இதனை உயிர் உரம் மற்றும் மற்ற இயற்கை பூஞ்சாணக்
கொல்லிகளுடன் கலந்து பயன்படுத்தலாம்
3.
வயலில் நீர்தேக்குதலை தவிர்க்க வேண்டும் மற்ற இரசாயன
பூஞ்சாணக் கொல்லிகள் மற்றும் உரங்களுடன் கலந்து
பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
வளங்குன்றா இயற்கை வேளாண்மைக்கு வழிசெய்வோம் !

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories