தானிய பயிர்களுக்குப் பிறகு பசுந்தாள் உர தாவரங்களை பயிரிடலாம்
அதிகம் ஊட்டச்சத்து தேவை மிக்க பயருக்குப் பின் குறைந்த ஊட்டச்சத்து தேவை மிக்க பயிர்களை பயிரிடுதல் வேண்டும்.
பருவம் சார்ந்த பயிர்கள் பயிரிட்ட பின் ஓராண்டுத் தாவரங்களைப் பயிர் பெயர் செய்யலாம்.
நூற் புழு தாக்கப்பட்ட பயிர்களில் அறிகுறிகள் யாவை?
உயரத்திலும் பருமனிலும் குறைந்த வளர்ச்சி செடியில் குறைந்த பட்ச கிளைகளின் எண்ணிக்கை இணை கருவின் நீளம் குறைதல் இலைகள் பச்சை நிறம் பழுப்பு நிறமாக மாறுதல் ஆகியவை நோயினால் தாக்கப்பட்ட பயர்களில் அறிகுறிகளாகும்.
மேலும் இலையின் ஓரங்கள் சிவப்பாகி மேல்புறமாக மடித்தல் கிளைகள் எல்லாம் ஒன்றுகூடி காலிபிளவர் போன்ற அமைப்பு உருவாதல் கிளைகளின் நுனியில் வெண்மை நிறமாகி தொங்குதல்உரு சிதைந்த மொட்டுக்கள் அல்லது பூக்கள் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
முருங்கைக்காயில் பிசின் நோய் உள்ளது இதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
முருங்கைக்காய் பிசின் வருவதற்கும்பழ ஈக்கள் காரணம் அதனால் பழ ஈக்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
விளக்குப் பொறி வைத்து பழ ஈக்களை கட்டுபடுத்தலாம் வேப்ப எண்ணை 5% தெளிக்கலாம் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் தெளிக்கலாம்.
மஞ்சளின் வளர்ச்சியை அதிகரிக்க இயற்கை முறையில் என்ன செய்யலாம்?
ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள மஞ்சள் செடிக்கு ஒரு கிலோ பெருங்காயத்தை ஒரு சாக்கு பையில் போட்டு நீர் பாசனம் இருக்கும் கால்வாயில் விட்டு வைத்தால் நீரில் பெருங்காயம் கரைத்து செடிகளுக்கு செல்கிறது.
இந்த முறையால் பயிர்கள் நன்றாக வளர்வதோடு மட்டுமல்லாமல் அதிலுள்ள பூச்சிகளின் தாக்குதலும் குறைகிறது.
ஒரு கறவை மாடு குறைவாக பால் கறந்தால் அடர் தீவனம் கொடுக்க தேவையே இல்லையா?
அடர் தீவனம் கொடுக்கும் அளவை குறைத்துக் கொள்ளலாம் கொடுக்காமல் இருக்க வேண்டும் ஏனெனில் அடர்தீவனம் அடுத்த கறவை காலத்தில் பால் அதிகரிக்க உதவும்.