விவசாயத்தில் ஒரு சில நுட்பங்களை தெரிந்து வைத்துக் கொண்டால் மகசூல் மற்றும் லாபம் பெறுவது எளிது தான். அனுபவ விவசாயி ஒருவரிடம் பகிர்ந்து கொள்கிறார் அதை பற்றி இங்கு காணலாம்.
தென்னந்தோப்பில் குரங்குகளினால் மகசூல் குறையலாம். குரங்குகள் கூட்டமாக தென்னந்தோப்புக்குள் புகுந்து ஒவ்வொரு மரத்திலும் ஏறி தளிர் விடும் பூக்கள் , பாளை ,குருத்து ஆகியவற்றை கடித்து தின்று விடும்.இதனால் தென்னையில் மகசூல் குறையும். இளநீர் மற்றும் தேங்காய்களை பறித்து வீணாகிவிடும். எனவே மரத்தின் மீது பாம்பு படத்தை வரைந்து வைப்பதன் மூலம் குரங்குகள் தோப்புக்குள் வருவதை தடுக்கலாம் .புலி உருவ பொம்மைகளை தொப்பை சுற்றிலும் வைப்பதன் மூலமும் குரங்குகள் புலி பொம்மையை பார்த்து பயந்து ஓடி விடும். குரங்கு சேதத்தை குறைக்க வயலில் பல இடங்களில் உணவு பண்டங்களில் அதிக காரம் மிளகாய் தூள் கலந்து பரவலாகத் தூவி விடலாம்.
உளுந்து, வண்டுகள் முட்டையிட ஏதுவாக சொரசொரப்பாக உள்ளதால் முட்டையிட்டுபுழுக்களை உருவாக்கி உளுந்தை உலுக்க செய்யும். இதனை கட்டுப்படுத்த 100 கிலோ உளுந்தை கொட்டி அதன் மீது கால் லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்தால் உளுந்து பளபளப்பாக மாறிவிடும். வண்டுகள் முட்டையிட முடியாது. மேலும் மிளகாய் வற்றலை இடித்து பரவலாக போட்டால் வண்டு தாக்குதல் இருக்காது.
எலுமிச்சையை மழை காலங்களில் நடவு செய்யக் கூடாது. கோடை காலங்களில் தான் நடவு செய்ய வேண்டும். மழைக்காலத்தில் நடவு செய்தால் பிரச்சனை அதிகமாக இருக்கும். கோடைகாலத்தில் மூடாக்கு போடுவதன் மூலம் தண்ணீர் தேவை குறையும். இதற்கு வாய்க்கால் பாசனத்தை விட சொட்டுநீர் பாசனம் சிறந்தது. தண்ணீர் இல்லாத காலங்களில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க மரத்துக்கு அடியில் தென்னைநார் கழிவுகள் வைக்கோல் போன்ற பொருட்களை பரப்பி விடலாம் எலுமிச்சை வறட்சியைத் தாங்கக் கூடிய பயிர்.