வைக்கோல் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் பெறுவது!

விவசாயக் கழிவுகள் எரிக்கப்பட்டு காற்று மாசு ஏற்பட்டு வந்த நிலையில், விவசாய கழிவுகளை கொண்டு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஒருவர்.

இந்த தொழில்நுட்ப யுகத்தில் விவசாயத்திலும் புதிய முயச்சிகள் மற்றும் யோசனைகள் இருந்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று நம்பி அதனை நடைமுறைப்படுத்தி லாபமும் பார்த்து இருக்கிறார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர யாதவ் (Virendra Yadav from Hariyana) என்பவர்.

பெரும்பாலும் மக்கள், வேலை அல்லது வாழ்வாதாரத்தைத் தேடி மற்ற நகரங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்கிறார்கள். ஆனால் இவரோ, வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து லட்சக்கணக்கில் லாபம் சம்பாதித்து வருகிறார்.

காற்று மாசு பற்றிய சிந்தனை!
அறுவடைக்கு பின்னான காலங்களில் தேங்கும் விவசாய கழிவுகளை விவசாயிகள் பலர் எரிப்பதால், டில்லி, உத்தர பிரதேச, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் காற்று மாசு ஏற்படுவது வழக்கமாக உள்ளன. இதைப்பற்றி யோசித்த வீரேந்திர யாதவ் வைக்கோல் கட்டும் கருவியை வாங்க முடிவு செய்தார்.

விவசாயத்தில் வெற்றிப்படியை எட்டிப் பிடித்த இஞ்சினியரிங் பட்டதாரிகள்!

வேளாண்துறையின் உதவி!
வீரேந்திர யாதவின் முயற்சிக்கு வேளாண்துறையும் உதவியது. அவர் நினைத்த வைக்கோல் கட்டும் கருவியை (Straw baler) 50 சதவீத மானியத்தில் வழங்கியது. அதன் மூலம் வைக்கோல்களை கட்டு கட்டாக கட்டி, அவற்றை விவசாய கழிவுகள் மூலம் எரிசக்தியாக மாற்றும் ஆலைகளுக்கும், காகித ஆலைகளுக்கும் விற்பனை செய்தார். இதன் விளைவாக அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.50 லட்சம் லாபம் ஈட்டிஉள்ளார்.

இயற்கை விவசாயமும், பாரம்பரிய அரிசி ரகங்களும்!! மனம்திறக்கும் கடலூர் விவசாயி சிவக்குமார்.

பிரதமர் மோடியின் பாராட்டு!
அண்மையில் நாட்டு மக்களிடையே வானொலி வாயிலாக “மனதின் குரல் – (Maan Ki Bath)” நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயி வீரேந்திர யாதவ் குறித்து குறிப்பிட்டார். கழிவுகளில் இருந்து பணத்தை சம்பாதிக்கும் வித்தை குறித்து பாராட்டு தெரிவித்த அவர் அதனை அனைவரும் கற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் இவர்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories