ஹைட்ரோபோனிக்ஸ் முறை இஞ்சி வளர்ப்பு!

 

நாம் இதுவரை ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன வளர்ப்பு முறையைப் பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இந்த முறையில் மற்ற பயிர்களை வளர்க்க முடியும் என்பது சாத்தியம் தான் அப்படி இஞ்சி பெயரை கூட மண்ணில்லாமல் நீரின் மூலம் வளர்க்க முடியும் அதை பற்றி இங்கு காணலாம்

வளர்ப்பு முறை

முதலில் ஒரு தொட்டியில் பாதி அளவு உரம் நிரப்பி இஞ்சி விதை துண்டுகளை 2.5 சென்டிமீட்டர் ஆழத்தில் நடவு செய்ய வேண்டும் மேலும் இதற்கு அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

இந்த விதை துண்டுகள் முளைத்து தண்டு மற்றும் இலைகள் வளர்ந்த பிறகு வேர்களை நீரில் கழுவி விட வேண்டும்

பிறகு ஹைட்ரோபோனிக்ஸ் சூட்டில் இஞ்சி செடிகளை வைத்து வேர்களை நிரப்பி விட வேண்டும். பிறகு வேறு சில வளர்ச்சி பொருட்களை கொண்டு மூடி வைக்க வேண்டும்.

அதன்பிறகு ஹைட்ரோபோனிக்ஸ் சட்டை தண்ணீர் குழாயுடன் இணைத்து அதன் வழியே அவ்வப்போது தண்ணீர் உரம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அளிக்கவேண்டும்.

மேலும் செடிகளுக்கு வெளிச்சம் மற்றும் நிழல் ஆகியவற்றை போதுமான அளவு அளிக்க வேண்டும் இந்த முறை வளர்ப்பில் 4 மாதங்களில் இஞ்சி அறுவடைக்கு தயாராகிவிடும்.

நன்மைகள்

இந்த முறை வளர்ப்பில் களை எடுக்கும் செலவு மற்றும் களைக்கொல்லிகள் அளிப்பது தவிர்க்கப்படுகிறது.

மண் மூலம் வளர்க்கும் முறையை ஒப்பிடுகையில் குறைந்த அளவு தண்ணீரே இந்த முறைக்கு போதுமானது மேலும் உபயோகித்த நீரை மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனால் விரைவாக தாவரங்கள் வளர்ச்சி அடைகின்றது மேலும் சுற்றுச்சூழலுக்கு மாற்றத்தினால் செடிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

வீட்டு தோட்டம் மாடி தோட்டம் மற்றும் குறைந்த இடத்திலேயே இந்த முறையை மேற்கொள்ளலாம் அதாவது இட வசதி இல்லாதவர்களுக்கு மிகவும் ஏற்றது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories