2021-22ம் ஆண்டு ஒரு போக சம்பா பட்டசாகுபடிக்கு உரிய நெல் ரகங்கள்:

2021-22ம் ஆண்டு ஒரு போக சம்பா பட்டசாகுபடிக்கு உரிய நெல் ரகங்கள்:

அன்பார்ந்த விவசாயிகளே,

பசுமை வணக்கம் !

தமிழ் மாதங்களின் ஒரு மங்களகரமான மாதம் ஆடிமாதம்.

ஆடிப்பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, கருட பஞ்சமி, ஆடி கிருத்திகை, என தமிழனின் பண்டிகைகளின் மாதம் இது. ஆடி மாதம் தட்சிணாயன காலத்தின் தொடக்க மாதம். ”ஆடிப்பட்டம் தேடி விதை” பழமொழிக்கேற்ப
ஆடிமாதத்தில் பூமிக்கு மிக அருகில் உள்ள சூரியன்
தன் வெப்பமான கதிர்களை பூமியெங்கும் பரவலாக அனுப்பும். இதனால் இந்தக் காலகட்டத்தில், பூமியின் மீது செயல்படும் சூரிய ஈர்ப்புத்திறன் உச்ச நிலையில் செயல்படும். இச்சூழலால் பூமியின் மண்வளம் மேலும் வளமாகிறது. தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் மாதங்களான ஆனி, ஆடி, ஆவணி மாதங்களே வேளாண்மைக்கான மாதங்கள். இம்மாதங்களில் பெரும்பாலும் நீர்ப்பற்றாக் குறை இருக்காது என்பதால் ஆடியில் விதை விதைப்பது அற்புதமான விளைச்சலைத் தரும். விட்டு விட்டுப் பெய்யும் ஆடிமாத மழை விதைகள் வளர, குறிப்பாக சிறப்பான ஆடி 18-ம் நாளும் அதன் பின்னர் அமாவாசை, பெளர்ணமியில் வரும் மேல் நோக்கு நாட்களும், விதை விதைப்பதற்கு ஏற்ற காலமாக இருக்கிறது. எனவே, இந்த நாட்களை பெரியோர்கள் ஆடிப்பட்டம் என்றே அழைத்தனர். அதனால்தான் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானது.

ஆடியில் பெய்யும் மழையால் ஊரெங்கும் செழித்து குளுமை பரவி சூரியனில் தொடங்கி, சிறு புழு பூச்சிகள் வரை பெரும் தாக்கத்தை உருவாக்கி விதைகளை நன்கு வளரச்செய்யும் என்பதாலேயே பழந்தமிழர்கள். ஆடியில் விதைப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர். இன்று மழை குறைந்து, நீர் அரிதாகி மண் வளம் குறைந்து மாறிப்போனாலும், அசைக்க முடியாத நம்பிக்கையோடு இன்னமும் நாம் ஆடியில் விதைத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

விதை முகூர்த்தத்திற்கு ஏற்ற மேல் நோக்கு நாட்கள் :

ஆடி – 18 – 03.8.21- தசமி
ஆடி – 23 – 08.8.21-அமாவாசை
ஆவணி6-22.8.21-பெளர்ணமி
ஆவணி15-31.8.21-நவமி

ஆடிப்பட்ட விதைப்பிற்கு ஏற்ற பாரம்பரிய நெல் ரகங்கள்:
1) சூப்பர் பொன்னி 180
2)களியன் சம்பா 160
3)கச்சகூம்பாளை 160
4)வாடஞ்சம்பா 160
5)வாழா நெல் 160
6)வைகுண்டா 160
7)வெ.மிளகு சம்பா 160
8)தங்க சம்பா – – 160
9) காட்டுயாணம் 160
10) கருடன் சம்பா 150
11) ஒட்டடையான் 150
11) மடு முழுங்கி 150
12) மாப்பிளசம்பா 150
13) சிவப்புக் கவுணி 150
14) வால் சிகப்பு 150
15) சம்பா 150

பல்கலைகழக ரகங்கள் :
1) பொன்மணி(CR-1009)-150
2) ஆடுதுறை 50 150
3) ஆடுதுறை 51 150
4) சாலிவாகனா 150
———————————

கோ.மோகன்ராஜ் யாதவ்,
9443014897.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories