E.M கரைசலை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யக் கூடிய தொழில் நுட்பம்

E.M கரைசலை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யக் கூடிய தொழில் நுட்பம்
ஜப்பான் நாட்டின் டாக்டர் டியூரொஹிகா என்பவரால் 1980 ல் அறிமுகப் படுத்தப்பட்ட E.M என்னும் திறநுண்ணுயிர் இன்று உலகின் 120 நாடுகளுக்கு மேல் விவசாயம் சுற்று சூழல் கால்நடை பராமரிப்பு போன்ற துறைகளில் உபயோகப் படுத்தப்படுகிறது. Effecttive microorganisame என்பதில் சுருக்க E.M இது இயற்கை இடுபொருள் என Ecocert சான்று தந்துள்ளனர்.
E.M 1 என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளில் தொகுப்பாகும். E.M 1 நீர்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். இதனை 1-1-20 என்ற விகிதத்தில் E.M 1 வெல்லம் அல்லது கருப்புச் சர்க்கரை குளோரின் கலக்காத நீரில் 5 – 10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் நொதிக்க வைக்க E.M 2 தயார். உருவாகும். வாயுவை வெளியேற்ற தினமும். 1 நொடி மூடியை திறந்து மூடவேண்டும்.
இதுதான் உபயோகத்திற்கு ஏற்றது. ஒரு மாதத்திற்குள் பயன்படுத்திட வேண்டும். நொதிக்க வைக்க கண்ணாடி கலன்களை தவிர்க்கவும்.
E.M கரைசலை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யக் கூடிய தொழில் நுட்பம்
இ.எம் கரைசல் ஒரு லிட்டர் தாய் இ.எம் வாங்கி வந்து அதிலிருந்து 20 லிட்டர் இ.எம் கரைசல் தயாரிக்கலாம்
தயாரிக்க தேவையான பொருட்கள்
20 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன் 1
வெல்லம் 1 கிலோ
E.M 1 கரைசல் 1 லிட்டர்
தண்ணீர் 18 லிட்டர்
தயாரிக்கும் முறை
முதல் படி
முதலில் வெல்லம் 1 கிலோவை தட்டி துகள்களாக கேனின் உள்ளே கொட்டவும் 9 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும்
பிறகு E.M கரைசல் ஒரு லிட்டரை ஊற்ற வேண்டும்
அதன்பிறகு திரும்பவும் 9 லிட்டர் தண்ணீரை ஊற்றி மூடிவிட வேண்டும்.
இரண்டாம் படி
தினமும் இவற்றை ஒரு முறை திறந்து திறந்து மூடிவும் இவை நன்றாக நொதித்து புளிப்பு வாடை வரும் .
இவ்வாறு (ஒரு வாரம்) 7 நாட்களில் இ.எம் கரைசல் அதிக அளவில் உற்பத்தியாகி விடும்.
பயன்படுத்தும் பயிர்கள்
அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்படுத்தும் அளவு
ஒரு லிட்டர் கரைசலுடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்து தண்ணீர் பாயும் பொழுது ஊற்றி விடலாம்
அல்லது
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து மாலை வேளையில் பயிருக்கு தெளிக்க வேண்டும்.
E.M 1 கரைசலின்பயன்கள்
பயன்கள்
நம்முடைய மண்ணில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
மகசூல் 20 சதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக கிடைக்கும்
மண்வளம் பாதுகாக்கப்படும் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் இருக்காது
பூக்கள் அதிகமாக பூக்கும் – காகள் அதிகம் பிடிக்கும்
வேர்வளர்ச்சி நன்றா ஓடும்
விவசாயம், நீர் நிலை பாதுகாப்பு, சுகாதாரம்,
முதலியவற்றில் இ.எம் கரைசல் அதிகம் பயன்படும்
இ.எம் கரைசலில் அதிகமான நுண்ணுயிர்கள் இருப்பதால் மண்வளம் பாதுகாக்கப்படும்
நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும்.
மண்ணில் உள்ள குப்பைகள் விரைவாக மக்கச் செய்யும்.
வேர் வளர்ச்சி அதிகரிக்கும்
பயிர் செழித்து வளரும்
மண்ணில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
சத்துக்களை சிதைத்து பயிர்கள் சுலபமாக எடுத்துக்கொள்ள வழி வகை செய்கிறது
சுற்று சூழல் மாசு படுத்தாது
தொற்று நோய் தடுக்கப்படும்
துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகள் அழிக்கப்படும்.
இவற்றை விவசாயம், கோழிப்பண்ணை, மருத்துவம், கழிவறை மற்றும் பொது இடங்களுக்கும் பயன்படுத்தலாம்.
சாக்கடை நீரில் தெளிப்பதன் மூலம் கொசுத்தொல்லை குறையும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories