(TMV 14) ரக நிலக்கடலையின் வளர் இயல்புகள் என்ன?

 

இது 95 முதல் 100 நாட்கள் வயது கொண்ட பயிர் ஆகும். இந்த ரகம் (ஜிஎ ன் )வி ஆர் ஐ 6 ,ஆர் 2001- 2002 ஆகிய நிலக்கடலை ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது.

இந்த நிலக்கடலை அனைத்து பயிர் பருவங்களிலும் பயிரிட ஏற்றது. இதன் விதைகள் பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் உற்பத்தித் திறன்70.6 சதவீதம் எண்ணெய் சத்து 48 சதவீதமாக இருக்கும்.

புரோட்டீன் இலைப்பேன் மற்றும் இலை சுருள் பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் குறைவு. இலைப்புள்ளி மற்றும் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.

காளான் படுக்கை அமைக்க தேவைப்படும் .வைக்கோல் மூலப்பொருட்கள் எவ்வாறு தயார் செய்யலாம்?

வைக்கோலை ஐந்து சென்டி மீட்டர் நீளமுடைய சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

அடுத்து அந்த வைக்கோலை ஒரு மணிநேரம் தண்ணீரில் வேக வைக்க வேண்டும் .அதன் பிறகு தண்ணீரை வடிகட்ட வேண்டும்.

வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். வைக்கோல் 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

பூசணி செடியில் வரும் சாம்பல் நோயை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

முதல் நிலையை அடைந்து கொண்டிருக்கும் இந்த நோய் தாக்குதலில் ஒரு சிறிய புள்ளிகள் தோன்றும்.

இந்த சாம்பல் நோயை கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேப்பெண்ணெய் காதி சோப்பு கரைசல் தெளிப்பதன் மூலம் தெளிக்க வேண்டும்.

கருவேப்பிலை நாற்று உற்பத்தி செய்வது எப்படி?

கருவேப்பிலை விதைகளை பறித்த மூன்று முதல் நான்கு நாட்களில் விதைக்க வேண்டும்.விதைகளை பாலித்தீன் பைகளில் மண் நிரப்பி விதைக்கலாம் .ஒரு வயதுடைய நாற்றுகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.

ஒரு பாட்டு ஆட்டு எரு நிலத்தை எவ்வாறு வளப்படுத்துகிறது?

ஆட்டு எருவில் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து உள்ளது. ஒரு ஆடு ஆண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் அளிக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 240 ஆடுகளை வளர்த்தால் போதுமானது.

ஒரு ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி தீராது ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருட்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories