குழி முறையில் கோழிஅவரை சாகுபடி

குழி முறையில் கோழிஅவரை சாகுபடி

ரகம் – கோழி அவரை
நிலம் – 40 சென்ட்
குழி எண்ணிக்கை – 105
ஒரு குழிக்கு 12 முதல் 15 விதைகள் நடவு செய்தேன்
இடைவெளி வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்கு செடி 8 அடி
நீர் நிர்வாகம்
சொட்டு நீர் பாசனமுறையை பின்பற்றி வருகிறேன்
40 சென்டுக்கும் 25 ஆயிரம் செலவு
வாய்க்காலில் பாய்ச்சினால் 4 நாளைக்கு என்னுடைய கேணியில் உள்ள தண்ணீர் பாயும்
சொட்டு நீர் பாசனத்தில் ஓரேநாளில் பாய்ந்து விடும் மீதம் இருந்தால் பைப்பை அடைத்து விடுவோம். இவை எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது
களை எடுக்கும் வேலை மிச்சம்
உரச்செலவு குறையும்
பூச்சி தாக்குதலும் குறைவாக இருக்கிறது
தேவையான நேரத்தில் தேவைப்படும் அளவு மட்டும் உரம் கொடுப்பதால் செடி வளர்ச்சி ஓரே சீராக இருக்கிறது

தொழில் நுட்பம்
பயிர் நடவு செய்து 15 நாட்களில் கொடியை நார் போட்டு பந்தலில் ஏற்றி விடனும் பந்தலில் ஏறியவுடன் எதிரெதிராக இருக்கும் கொடிகளை அந்தந்த திசைப்பக்கம் வைத்து நார்போட்டு கட்டி விடனும் பந்தல் முழுவதும் அடைக்க 50 நாட்கள் ஆகும் காய் 65 நாளிலேயே எடுக்கலாம்.
இந்த கோழி அவரை நடவுசெய்தால் காய் அதிகம் பிடிக்கும் நல்லமகசூல் கிடைக்கும் இவற்றை ஒரு தடவை நடவு செய்து பார்த்தால் அடுத்தமுறையம் கோழி அவரையேதான் சாகுபடி செய்வார்கள் சொந்த ஆட்கள் இருந்தால் கட்டுக்கூலி செலவும் மிச்சம் இந்தவருடம் நல்ல விலையும் கிடைக்கிறது

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories