சீன மூங்கில்
சீன மூங்கில் தாவரம் பார்ப்பதற்கு மூங்கில் போலவே காட்சி தரும் .ஆனால் மூங்கிலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இந்த சீன மூங்கில் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என கருதப்படுகிறது அதனால் இதற்கு அதிர்ஷ்ட மூங்கில் என்ற பெயரும் உண்டு.
ஜேடு பிளான்ட்
இந்த செடியின் இலைகள் தடிமனாக இருக்கும். இந்தச் செடி மண்ணில் வளரும் தன்மை கொண்டது. இதற்கு நேரடியாக வெளிச்சம் தேவை இல்லை .எனவே இதையும் வீட்டுக்குள்ளே வளர்க்கலாம்.
பீஸ் லில்லி
இந்த செடி அழகான தோற்றத்துடன் வெள்ளை நிறத்தில் வளர்க்கக் கூடியதாகும். அதனால் இது அமைதி லில்லி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த செடியை மேஜையில் தொட்டியில் வளர்க்கலாம்.
மணி பிளான்ட்
மணி பிளான்ட் எளிதாக கிடைக்கும் செடிகளில் ஒன்று ஆகும். இந்தச் செடி வீட்டில் உள்ள காற்றை சுத்தமாக உதவுகிறது .இது வெறும் தண்ணீரில் வளரக்கூடிய தன்மை கொண்டதாகும்.