சோலார் விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.
குறிப்பாக இந்த விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகள் துளைப்பான், பழம் துளைப்பான் ,சாறு உறிஞ்சும் பூச்சிகள் ,வெள்ளை பூச்சி ,பழ வண்டுகள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் பூச்சிகளையும் கவரக் கூடியது.
ஒரு தாய் அந்துப் பூச்சியை பிடிப்பதால் அதன் மூலம் உருவாக்க கூடிய 800க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை அடையாளம் காண முடியும். இதனால் எளிய முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
நன்மை செய்யும் பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு பெருமளவில் துணை புரிந்து அதிக மகசூல் பெற இது உதவுகிறது.