தட்டான் மற்றும் ஊசித்தட்டான் போன்ற பூச்சிகள் வயல்களிலும் வானிலும் நீர்நிலைகளின் மீதும் பறந்து கொண்டு இருப்பவை யாகும் இந்த தட்டான் பூச்சிகள் வயல்களில் மேல் பறந்து செல்லும் கொசு மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து உண்ணும் தட்டான் பூச்சிகள் தனக்கு தேவைப்படும் இடையைச் சுற்றி வளைத்துக் தேடும் கொண்டதால் வயல்களில் உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளம் புழுக்களை தேடிப்பிடித்து மேலும் மகரந்த சேர்க்கை அதிக அளவில் நடக்க உதவி செய்கின்றன அதிக மகரந்த சேர்க்கை நடந்தால் அதிக மகசூல் கிடைக்கும்
தட்டான் தண்ணீர் உள்ள நெல் வயல்களில் முட்டையிடுகின்றன பிறகு அதில் வளரும் இளம் புழுக்கள் தண்ணீரில் உள்ள பூச்சி புழுக்கள் உண்டு வளர்ந்து கூட்டு புழுக்களாக மாறி நெற்பயிரின் அடிபாகத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும். வளர்ந்த தட்டான் பயிரில் உள்ள பூச்சிகளை பிடித்து உண்ணும். பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் வயல்களில் இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கலாம்.