நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கும் வழிமுறைகள்

நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி உண்டு அவற்றின் பெருக்கத்தை குறைத்து விளைச்சலை அதிகப்படுத்த வழிவகுக்கிறது .இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்துவதால் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுக்குள் வைத்து நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கச்செய்யும் .

ஆனால் அதை தவிர்த்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது முதலில் அழிவது நன்மை செய்யும் பூச்சிகள்தான். இதனால் நோய்களும் அதிகம் ஏற்பட்டு,விளைச்சலும் குறைகிறது.

தட்டை பயிரை வரப்புகளில் பயிரிட்டால் அஸ்வினி பூச்சிகள் அதிகமாக இருக்கும். அவற்றை சாப்பிட நன்மை செய்யும் பூச்சிகள் வரும் எனவே தட்டைப்பயிர் முதன்மை பயிர்களுக்கு ஒரு அரணாக விளங்கி தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துகின்றன. வரப்பு ஓரங்களில் மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும் செண்டுமல்லி சூரியகாந்தி போன்ற செய்திகளை பயிரிடவும் .அவை நன்மை செய்யும் பூச்சிகளை தன்வசம் கவர்ந்திழுக்கும் .வரப்புகளில் மக்காச்சோளத்தை நடலாம் .இதுவொரு தாங்கி போல் செயல்பட்டு பறவைகள் அதில் அமர்ந்து தீமை செய்யும் பூச்சிகளை உண்ண வழிவகுக்கும்.

வரப்புகளில் ஆமணக்குச் செடிகளை நடுவதன் மூலம் வயலில் உள்ள அதிகமான பூச்சி எது என கண்டறியலாம். தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை அரைத்து பயிர்களில் தெளித்து விடலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories