சோளம் பயன்கள்

சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது.

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால் உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.
வயிற்றுப்புண் ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.

கண் குறைபாடுகளை சீர் செய்யும் பீட்டா கரோட்டின் இதில் அதிகமாக உள்ளது.

சோளம் பால் உற்பத்தி உற்பத்தி அதிகரிக்க வல்லதாகும்.

சோள கழிவுகள் கறவை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.

கம்பு பயன்கள்

எல்லா தானியத்தை விடஅதிக அளவில் கம்பில் 11.8 சதவீதம் புரோட்டீன்கள் உள்ளது .ஆரோக்கியமாக இருக்க துளிர்க்கும் சருமத்திற்கும் ,கண்பார்வைக்கும் முக்கிய சத்தான விட்டமின் ஏ உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

வேறு எந்த தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவீதமும் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

உடல் பலம் பெற கம்பு மிகச் சிறந்த உணவாகும் .கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

கம்பு உணவுகள் இதயத்தை வலுவாக்கும் .நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். மேலும் ரத்தம் சுத்தமாகும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories