நாற்று பண்ணைஆங்கிலத்தில் நர்சரி கார்டன் என்று அழைப்பார்கள்.
இந்த தொழிலை மேற்கொண்டால் நல்ல லாபம் பெற முடியும். ஆண்டு முழுவதும் லாபம் தரும் தொழிலாக உள்ளது. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. அருகில் உள்ள பண்ணைகளில் மலர் செடிகளை வளர்க்கும் முறைகள் எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
இதற்கு முதலீடு குறைந்த அளவு தேவைப்படும். செடிகளை வளர்க்க 4 முதல் 5 சென்ட் இடம் தேவைப்படும். செடிகளை வெயிலில் இருந்து பாதுகாக்கவும் நிழல் வலை கூண்டுவைக்க வேண்டும்.
மக்கள் பயன்படுத்த கூடிய மலர்ச்செடிகள், பழ தரும்செடிகள் மூலிகைச் செடிகள், அலங்கார செடிகள், வீட்டில்வைக்கக்கூடிய நிழல் தரும் மரக்கன்றுகளும் பூச்செடிகள் ஆகியவற்றையும் வளர்க்கலாம்.
இந்த கன்றுகளையும் உற்பத்தி செய்யும் செம்மண் நிலம் ஏற்றதாக இருக்கும். முதலில் உழவு உழுத 7 அடி நீளம் மற்றும் 2.5 அடிக்குபார்அமைக்கவேண்டும்.
இது தேவையான விதைகளை தூவியும் தொழு உரத்தை அளிக்கலாம். காய்ச்சலும் பாய்ச்சலுமாக தினமும் தண்ணீர் விட வேண்டும். இப்படி 3.1 என்ற அளவுக்கு செம்மண் மற்றும் தொழு உரமிட்டு வேறு முழுமையாக மறையும் அளவிற்கு ஊன்ற விடவேண்டும்.
3 மாத வயதில் கன்றுகளை விற்பனை செய்யலாம்.