வயலுக்கு நிலப்போர்வை அமைத்தல்
நிலப்போர்வை அமைப்பதால் ஏற்படும் பயன்கள்
களையை கட்டுப்பத்தலாம்
நீர் ஆவியாதலை குறைத்து தண்ணீரை மிச்சப்படுத்தலாம்
வேளையாட்களை குறைக்கலாம்
பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்
செலவு குறையும் மகசூல் இரண்டுமடங்கு அதிகரிக்கும்
நோயின் தாக்குதல் குறையும்
மண்வளம் கூடும்
பயிர் ஓரேசீராக இருக்கும்
அடிக்கடி நாம களைஎடுக்கும் கருவி கொண்டு களை எடுப்பதால் பயிரின் வேர், செடியும் பழுதாகிறது அவற்றை தவிர்க்கலாம்
தரமான காய்கறிகள் நமக்கு கிடைக்கும், எடையும் கூடும்
பயன்படுத்தும் முறை
பாலுத்தீன் சீட்டை தேவையான வற்றை தேர்வு செய்து 30 மைக்ரான், 50 மைக்ரான், 100 மைக்ரான் போன்ற மல்சிங் சீட் உள்ளது தேவையானவற்றை பயன்படுதவும்.
60 நாட்கள் பயிருக்கு 30 மைக்ரான்
ஒன்றரை வருடம் பயிருக்கு 50 மைக்ரான்
மூன்று வருட பயிருக்கு 100 மைக்ரான்
என்ற அளவில் மல்சிங் சீட் வாங்கிக்கொள்ளலாலாம்
முதலில் நடவு வயலை தயார்செய்தல் வேண்டும்.
நன்றாக வயலை சமப்படுத்த வேண்டும் பிறகு அதில் நாம் வாங்கி வைத்துள்ள 100 மைக்கிரான் அளவுள்ள பாலுத்தீன் சீட்டை வயலில் எட்டு எம்.எம் கம்பியை வளைத்து காற்று தூக்கா வண்ணம் 8 அடிக்கு ஒன்று வீதம் அடித்து வயலில் விரித்து விட வேண்டும்.
.அதன் மேல் சொட்டு நீர் பாசனத்தை அமைக்கலாம் தேவையான அளவு இடைவெளி விட்டு துளையிட வேண்டும்.
பாலுத்தீன் சீட் 4 அடி அகலம் உள்ள 50 மைக்கிரான் சீட் ஒரு ஏக்கருக்கருக்கு 150 கிலோ பாலுத்தீன் சீட் வாங்க வேண்டும்.
ஒரு கிலோ பாலுத்தீன் சீட் 19 மீட்டர் நீளம் இருக்கும்
பாலுத்தீன் சீட்டை வயலில் விரித்து விட்டு வயலின் இருபக்கமும் மண்கொண்டு மூடி விடவேண்டும்.
செடியை நடவு செய்ய தேவையான இடைவெளியை பாலுத்தீன் சீட்டில் விட்டு 2.5 இஞ்சு உள்ள பைப்பின் உதவியுடன் துளைகள் இடவேண்டும்.
துளைகள் போடப்பட்டுள்ள இடங்களில் நாற்றுகள் அல்லது விதைகளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்சலாம்
மல்சிங் சீட் போடுவதால் ஏற்ப்படும் பயன்கள்
கோரை, அருகு போன்ற கட்டுபடுத்த முடியாத களையைக் கூட கட்டுப்படுத்தலாம் .
தண்ணீர் பற்றாக்குறையை போக்கலாம். நீர் ஆவியாகாமல் தடுக்கலாம்.
பூச்சி நோய் வராமல் பாதுகாக்கலாம் மொத்தத்தில் செலவை குறைத்து மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது
மேலும் தொடர்புக்கு