பயிர் சேதாரமின்றி மழை நீர் சேமிக்க ஒரே வழி

நான் ஸ்ரீபாலா,தன்னார்வத் தொண்டர், ஷ்ரௌம் அறக்கட்டளை, பெருந்துறை, ஈரோடு.

கடந்த 2008 மார்ச் முதலான என்னுடைய விவசாய நிலங்களின் ஆய்வின் அடிப்படையில் சொல்லுகிறேன்.

உலகத்திலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை ஒரே இடத்தில் கொண்ட, நீர்பிடிப்போடான நிலப்பரப்பு தமிழகம்தான்.

நம்முடைய முன்னோர்கள், எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, சமவெளிப்பகுதிகளின் தன்மை அறிந்து, ஏரிகளையும், அவற்றை ஒன்றோடு ஒன்று இணைக்கும் கால்வாய்களையும் வெட்டினார்கள்.

ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தின போது கூட இந்த நீர்நிலைகள் நாசமாகவில்லை.

கடந்த 100 வருடங்களுக்குள், முன்னேற்றம் எனும் பெயரில் வெட்டி வேலையாக பணத்தைக் கொட்டி, ஏரிகளை மறைத்து இருப்பிடமாக்கியது இந்த மாநில அரசாங்கம்.

போதாததற்கு, தண்ணீரை தக்க வைக்க முடியாத மலை மற்றும் பீட பூமிப்பகுதிகளான கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்டு, நாடகம் நடத்தினார்கள்.

நான், தமிழ்நாட்டில் பிறந்தவள்; ஆனால், கர்நாடகத்தின் எல்லைப் பகுதிகளில் வாழ்ந்தவள்!

தஞ்சை டெல்டா பகுதி விவசாயிகளிடம் மழைக்காலத்தில் என்னோடு ஒரு குழுவாக வரச்சொல்லி, மைசூர், சத்தியமங்கலம் பகுதி மழை எங்கே சென்று வீணாகிறது என புரிய வைத்தேன். அது ஒரு 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

ஆனால், இனியும் விவசாயிகளிடம் தண்ணீருக்காக, அரசியல் பேசும் மடமை அரங்கேற முடியாது!

கர்நாடகத்தின் மொத்த மழையை விட, நமது மழைபிடிப்பு சமவெளிகளிலும், கிழக்கு தொடர்ச்சி மலைகளிலும், கிழக்கு கடற்கரையோர பகுதிகளிலும் மழை தாராளமாகவே பிய்த்து உதறுகிறது; கடலுக்கு வீணாகப் போகிறது. எனவே இருக்கும் நீர்நிலைகளை பண்படுத்தி, தொலைந்து போன நீர்னிலைகளின் இடங்களில் நீர் சேமிப்பு திட்டங்களை reversible ஆழ்துளை மூலம் கொணர்ந்து, உபயோகப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் மாநிலங்களில், தமிழ்நாட்டைப் போல நீர்,நில வளங்கள் ஒரு சேர அமைந்த வாழ்க்கை இந்த 🌏 எங்குமே காணோம்.

நான் ஆசியா முழுக்கவும் சுற்றி வாழ்ந்தவள்; நம்மைப் போன்ற மண்வளமும், மனித வளமும் ஒருசேர எங்குமே காணோம்.

வண்டல், சரளை, கரிசல், களி, செம்மண் என விதம்விதமான மண் வகைகள் ஒரே இடத்தில் ஜாலம் பண்ணுமிடமும் தமிழ்நாடுதான்.

எல்லா வளங்களும், டாஸ்மாக் எனும் குடிகேட்டுக்கும், பித்தலாட்ட அரசியலுக்கும் அடகு வைத்து அமர்ந்திருப்பதும் இங்கேதான் அரங்கேறி வருகிறது

ஏரிகளின் கணக்கெடுப்பில், அனேகம் நீர்னிலைகள் ஆக்கிரமித்து இருப்பதை, இப்போதுதான் பேசுகிறார்கள்.

விவசாயிகள் மனது வைத்தால், கண்டிப்பாக நீர் பிடி இடங்களில் 1. பண்ணை குட்டை அமைப்பு
2. சிறு ஏரி & குளங்களை தூர்வாருதல் மற்றும் தொழில் நுட்ப உதவியுடன் , (reversible deep bore well) ஆழ்துளை கிணற்று ☔ நீர் தேக்கம் என பல விதங்களிலும் நீர் சேமித்து, வெள்ளத்தைத் தடுக்கலாம்.

பயிர் சேதாரமின்றி மழை நீர் சேமிக்க ஒரே வழி பாரம்பரிய நெல் பயிர் செலவே என உணர்ந்து பாரம்பரிய முறையில் பண்ணைகள் அமைய வேண்டும்.

இனியாவது விழிப்புணர்வுடன் செயல்படுவோம் நண்பர்களே!

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories