அதிக மகசூல் பெற அற்புதமான வழிமுறைகள்!

அதிக மகசூல் பெற அறிவுரை விவசாயிகள் நுண்ணுயிர்ப் பாசனம் மூலம் குறைந்த நீரைக்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

குறை தீர்ப்புக்கூட்டம் (Meeting)
கிருணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது

மழை அளவு (Rain Recorded)
இந்த மாவட்டத்தில் இதுவரை 21 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் டிசம்பர் 2020 வரையில் 118,073 ஹெக்டேர் பரப்பளவில் உணவு தானியப் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சாகுபடி பரப்பு (Cultivation area)
இதில் நடப்பாண்டில் நெல் 20 ஆயிரத்து 248 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 45 ஆயிரத்து 31 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 52 ஆயிரத்து 794 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துப் பயிர்கள் 16 ஆயிரத்து 444 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 60.28 மெட்ரிக் டன், ராகி 40.98 மெட்ரிக் டன், தட்டைப் பயறு 146 மெட்ரிக் டன், கொள்ளு 8.20 மெட்ரிக் டன், நிலக்கடலை 40.23 மெட்ரிக் டன் விதைகள் இருப்பில் உள்ளன.

குறைந்த நீரில் அதிக மகசூல் (High yield in low water)
விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் நுண்ணுயிர் பாசனம் அமைத்து குறைந்த நீரில் அதிக மகசூல் செய்து பயனடைய வேண்டும்.

விவசாயிகள் தாங்கள் பயிரிடப்பட்டுள்ள பயிர்களில் ஏதேனும் நோய்த் தாக்குதல் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு உரியப் பயிர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பயனடைய வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories