ஆண்டுக்கு ரூ.5 இலட்சம் இலாபம் தரும் “சொட்டுநீர் பாசனம்”……

வெண்டை,மிளகாய்,புடலங்காய்,தக்காளி போன்ற காய்கறி வகைகளை சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி செய்து ஆண்டிற்கு ரூ.5 இலட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டலாம்.

செவல் மண் நிறைந்த பகுதியில்,வெம்பக்கோட்டை வேளாண் தோட்டத் துறை மூலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 75 சதவீத மானியத்துடன் சொட்டு நீர் பாசன முறையை 12 ஏக்கரில் அமைத்தார் ஒரு இயற்கை விவசாயி. அவர் பெயர் இராமநாதன்.

அவர் இந்த பயன்பாட்டு முறையை கையாண்டதன் மூலம் குறைந்த விதை அளவு கொண்டு,களையின்றி விவசாயம் செய்ய ஏதுவாக அமைந்தது.

பாத்திபாசனத்தில் 25 சதவீத நிலங்கள் வீணாகிறது. சொட்டு நீர் பாசன முறையில் 1 ஏக்கரில் விதைப்புக்கு ஏற்ற அளவில் மகசூல் எடுக்க முடியும். இந்த முறையில்,வேர் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதோடு,அதிக ஆட்செலவும் இல்லை.

நீர் செலவும் குறைக்கப்படுவதால் விவசாயம் செய்ய உகந்ததாக சொட்டு நீர் பாசனம் இருக்கிறது. வெண்டை,புடலங்காய்,தக்காளி,மிளகாய் வரிசை நடவு முறையில் பயிர் செய்யப்படுவதால் நோய் தொற்றும் குறைவு. அறுவடை செய்யவும் ஏதுவாகவும் அமைகிறது.

சொட்டு நீர் பாசன முறையில் 3 நாள்களுக்கு ஒரு முறை பாசன நீர் விட்டால் போதும்.

வாரத்திற்கு ஒருமுறை பாசன நீரில்,கரையக்கூடிய ஆல் 19 உரத்தை கரைசலாக்கி கலந்து விட வேண்டும்.

இதன் மூலம் தலைமணி,சாம்பல் போன்ற ஊட்டச்ச்த்து நிறைந்த சத்துக்கள் கிடைத்து செடி வளர்ச்சிக்கு நல்வகையில் ஊக்குவிக்கிறது.

இவை சீரான முறையில் கடைபிடிப்பதால் வெண்டை 45 நாட்களில் காய் ஒடிக்க முடியும். புடலங்காய் 55 நாட்கள்,தக்காளி 70 நாட்கள்,மிளகாய் 105 நாட்கள் முதல் அறுவடை செய்ய உகந்ததாக மாறிவிடுகிறது.

அதன் பின் தினமும் கிலோ கணக்கில் காய்கள் பெறமுடியும். ஒவ்வொரு காய்கறிகளில் இருந்து ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.1 இலட்சம் பெற முடிகிறது.

அனைத்து காய்கறிகளையும் எடுத்துக் கொண்டால் இலாபம் மட்டும் ரூ. 5 இலட்சம் வரை பெற முடியும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories