“ஈரன் தானே வீரம் பயிருக்கு”
விவசாயத்தில் முதலாவது மண் மற்றும் அதை தொடர்ந்து ஈரம் ஆகியவை முக்கியமானதாகும் இந்த வகை மன்னுடைய தன்மையின் சிறப்பை குறித்து இங்கு காணலாம்.
ராம் என்பவருக்கு விதை எப்படி முளைக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள விவசாயியான அவரது தாத்தாவிடம் கேட்டார். அதற்கு அவரது தாத்தா விதை முளைப்பதற்கு பூஞ்சான தாக்குதல் ஏற்படாத தரமான விதைகளாக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல மண்ணின் தன்மையானது வளர்வதற்கு ஏற்ற வகையில் சரியானதாக இருக்கவேண்டும் அதோடு மண்ணின் ஈரம் அவசியம் ஏனென்றால் ஈரம் தானே வீரம் பயி ருக்கு என்று கூறினார்.
அவர் பேரன் என்ன சொல்றீங்க தாத்தா என்றான்.
அதற்கு அவர் விதையை விதைத்த பிறகு ஈர மண் கொண்டு மூடி விடுதல் வேண்டும் இல்லை என்றால் விதைத்த பின் தண்ணீர் தெளிக்க வேண்டும் அப்போது தான் விதை முளைப்புத் திறன் பெற்று நன்கு வளரும் இதைத்தான் நம் முன்னோர்கள் வீரம் தானே வீரம் பயருக்கு என்று சொன்னார்கள். நிலம் எவ்வளவு இருந்தாலும் நீர் பாசன வசதி இருந்தால் மட்டுமே விவசாயம் சாத்தியமாகும்.
மண்ணின் ஈரத்திற்கு ஏற்ப நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். அவ்வாறு நீர்ப்பாசனம் உள்ள இடங்களில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம் இதனால் விவசாயிகள் லாபம் பெறலாம்
அவரது பேரன் எ ப்படி நீர்ப்பாசனம் செய்யவேண்டும் தாத்தா என்றான்.
அதற்கு அவர் நீர்ப்பாசனம் பயிர் செய்யும் பயிர்களைப் பொருத்து அமையும். ஒரு சில பயிர்களுக்கு அதிக ஈரமும் ,ஒரு சில பயிர்களுக்கு மிதமான ஈரமும் போதும் ஒருவேளை குறைந்த ஈரமுள்ள பயிர்களுக்கு அதிக தண்ணீர் விட்டாலும் பிரச்சனைதான். இதனால் வேர் அழுகல் ஏற்பட்டுவிடும். மற்றும் காய்ச்சலும் பாய்ச்சலும் விவசாயத்தின் முக்கியமான ஒன்று என்கிறார்.
சரி தாத்தா நிலத்திற்கு ஈரம் கிடைக்க செய்ய ஏதாவது தொழில்நுட்பங்கள் இருக்கிறது எனக்கு கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் என்றார் அதற்கு அவரது தாத்தாவோ இருக்கிறது பயிர்களுக்கு ஈரம் கிடைக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றது. அந்த வகையில் தண்ணீர் மிச்சப்படுத்த நிலத்தை ஈரப்படுத்த சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், என பல பாசன முறைகள் பின்பற்றப்படுகிறது. நிலத்தில் உள்ள ஈரம் உலர்ந்து போகாமலிருக்க மூடாக்கு முறைகளும் பின்பற்றப்படுகின்றன.
எனவே எந்த பயிராக இருந்தாலும் அதன் வளர்ச்சிக்கு ஈரப்பதம் மிக முக்கியமாகும் என்றான்.