சொட்டுநீர்ப் பாசனத்தின்போது கடைப்பிடிக்க வேண்டியவை!

வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும் இதுவே அவ்வையின் அர்த்தம் மிகுந்த வரிகள்.இதில் குறிப்பிட்டிருப்பதன்படி, விவசாயமும், நீர்ப்பாசனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்த ஒன்று.

எதற்காக சொட்டுநீர் பாசனம் ? (Why Drip Irrigation?)
நீரைச் சேமிப்பதற்காகவும், குறித்த நேரத்தில் தேவையான தண்ணீர் பயிருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சொட்டு நீர்பாசனத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்துப் பார்ப்போம்.

சொட்டுநீர் பாசனம் (drip irrigation)
பயிர் கேட்டும் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படுகிறது மற்றும்

கட்டுப்படுத்தப்பட்ட பாசனம்.

வேர்களுக்கு அருகில் நீர் கொடுக்கப்படுகிறது

நீண்ட நேரம் நீர் அளிக்கப்படுகிறது

தட்டுப்பாடு இல்லாமல் அடிக்கடி நீர் தருவது

தண்ணீரைக் குறைந்த அளவில் கொடுப்பது

குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் கொடுக்கப்படுகிறது

நன்மைகள் (Benefits of drip irrigation)
மகசூல் அதிகரிக்கும் தேவையான அளவு ஈரப்பதம் இருக்கும். எனவே அதிக மகசூலும், தரமும் நன்றாக இருக்கும்.

பயிர் சீக்கிரம் அறுவடைக்கு (Harvesting) வருகிறது.

அதிக ஈரப்பதத்தினால் வரும் நோய்கள் (Disease)கட்டுப்பட வாய்ப்பு உருவாகிறது

70 % வரை தண்ணீர் (Water)சிக்கனமாகிறது.

களைகள் (Pest) கட்டுப்பாட்டில் இருக்கும்.

தொழிலாளர்கள் கூலி (Salary) குறையும்.

உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவற்றைச் சொட்டுநீர் பாசன முறையில் தருவதாய் வீணாவது தடுக்கப்படுவதுடன், செலவும் (Expenditure) குறைய வாய்ப்பு உருவாகிறது.

தண்ணீர் மூலம் பரவும் நோய்கள்(Water Disease) குறையும்.

மேடு, பள்ளங்களைச் சமன் செய்யாமல் பயிர் செய்யலாம். இதன் மூலம் மேல் மண் அப்புறப்படுத்தப்பட வாய்ப்பு இல்லை.

சீக்கிரம் அறுவடைக்கு வருவதால் நல்ல விலை (Price) கிடைக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை (Things to keep in mind)
சாகுபடி நிலம் (Land) பற்றிய முழுமையான சேர்வை தேவை

ஒரு நாளைக்குத் தேவைப்படும் தண்ணீரின் (Water) அளவு

கிணற்று நீர் வாய்க்கால் நீர் விவரம்

பயிரின் நீர் தேவை (Water Need)

பயிர் வகை (Crop Variety) அதன் வயது

மண் வகை (Sand)

வெயிலில் நீர் ஆவியாகும் அளவு

இவற்றைக் கருத்தில் கொண்டு சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்தால், நல்ல மகசூல் கிடைக்கும். அதிக லாபமும் அடையமுடியும்!

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories