சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தேவைப்படும் அளவுக்கு மற்றும் இடத்திற்கு மட்டும் நீரை பாய்ச்சலாம் .இரவு நேரங்களிலும் இதன் மூலம் எளிதாக பாசனம் செய்யலாம் .மின்சாரம் மற்றும் டீசல் மூலம் பயன்படுத்தலாம். குறைவான நேரத்தில் அதிக நீர் பாசனம் செய்யலாம் .இதனால் செலவும் குறையும் வேலையாட்களின் தேவையும் குறையும் கலைகள் இவற்றின் மூலம் உருவாகும். ஆனால் அவை பயிர்களுக்கு உயிர் மூடாக்காக பயன்படும்.
இந்தப் பாசனத்தின் மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம் .மேலும் நீர்ப் பாசனம் செய்யும் நாட்களின் இடைவெளியை அதிகரிக்கலாம். இந்தப் பாசனத்தின்வரப்புகள் மற்றும் வாய்க்கால் தேவைப்படாது. எனவே அந்த இடங்களில் கால்நடைகளை மேய்த்து பயனடையலாம் .நீர் பாய்ச்சும் நேரம் குறைவதால் அந்த நேரத்தில் விவசாயம் செய்த வேலைகளை செய்து அதிக வருவாய் ஈட்டலாம். மூன்று மாத பயிர் முதல் ஆண்டு பயிர் வரை அனைத்திற்கும் இந்த பாசனம் உகந்ததாகும். இந்த பாசனத்தின் மூலம் அதிக நிலப்பரப்பில் விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டலாம்.