நிலத்தடி நீரை கண்டறியும் முறைகள்

மழை வளம் குறைந்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. ஏற்கனவே உள்ள கிணறுகளிலும் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் புதிய கிணறுகளையும் போர்களையும் அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த அறிவியல் உலகில் நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடத்தை பல்வேறு கருவிகள் கொண்டு கண்டுபிடித்து பயன்படுத்துகின்றனர்.

ஆனால் நம் முன்னோர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை கண்டறிய ஒரு சில இயற்கை கருவிகளை பயன்படுத்தினர்.

கரையான் புற்று

கரையான் புற்று உள்ள இடத்தில் கண்டிப்பாக நீர் இருக்கும் அதுவும் சுவையான நீர் கிடைக்கும்.

கரையான் பொதுவாக ஈரமான பகுதியில் மட்டும் ஏற்படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்றும் கூட கிராமங்களில் தண்ணீருக்காக இடம் பார்க்கும்போது கரையான் புற்று உள்ள இடத்தை தான் தேர்வு செய்கிறார்கள்.

Yவடிவு குச்சி மூலம் கண்டறிதல்

Y வடிவம் போன்ற குச்சியின் தனது இரு உள்ளங்களுக்கு இடையே இலேசாக பிடித்துக்கொண்டு நிலத்தின் மீது மெதுவாக நடக்கும்போது எங்கு நிலத்தடி நீர் தரைமட்டத்திலிருந்து அருகே உள்ளதோ அங்கு அவர் கையில் பிடித்துள்ள குச்சி வேகமாக சுற்றும் அவை கொண்டு அந்த இடத்தில் கிணறு வெட்டுவது ஆள்துளைகுழாயோ அமைத்துக்கொள்ளலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories