மழைத்தூவி மூலம் பயறு வகை பயிர்களுக்கு நீர் பாசனம்!

தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் பாசனத்திற்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு தெளிப்பு நீர் பாசனம் கையாளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பயறுவகைப் பயிர்களுக்கு நீர் பாசனம் செய்ய மழைத் தூவி பாசனம் எனப்படும் ரெயின்கன் அமைப்பை பயன்படுத்தப்படுகிறது. அதைப் பற்றி இங்கு காணலாம்.

மழை தூவி

மழை தூவி என்பது தெளிப்பு பாசனத்தின் சற்று பெரிய அமைப்பாகும். இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் நீரை 90 அடி விட்டத்திற்கு செயற்கை மழையை போல் பயிருக்கு தெளிக்க முடியும்.

நீர் தெளிக்கும் அளவு மணிக்கு 2.5 முதல் 3.5 மீ. மீட்டர் ஆகும். இந்த கருவியை சாகுபடி திட்டத்திற்கு ஏற்றபடியோ அல்லது பயிர்களின் தன்மைக்கு தகுந்த மாதிரியாகவும் ஒரே இடத்தில் நிலையாக அல்லது இடத்திற்கு இடம் மாற்றி அமைத்தோ பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் இடங்கள்:

இந்த இந்த தெளிப்பு பாசனம் மழைத்தூவியை கரும்பு, பயறுவகை பயிர்கள் ,எண்ணெய் வித்துப் பயிர்கள், காய்கறிகள், தானியப் பயிர்கள் போன்றவற்றிற்கு பாசம் செய்யப் பயன்படுத்தலாம்.

மேலும் மலைத் தோட்டப் பயிர்களான தேயிலை, காபி, புல்வெளிகள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

மழை வராத வறண்ட காலங்களில் நிலத்தில் கிடைக்கும் குறைந்த நீரை கொண்டு இந்த மழைத்தூவி தெளிப்பு பாசன கருவி மூலம் நீர் பாசனம் செய்யலாம். இதனால் குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் இரண்டு முறை பாசனம் செய்யலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories