மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்:

மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்:

1. கடலூர் மாவட்ட நதிகள்: தென்பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு, பரவனாறு, வெள்ளாறு, கோமுகி ஆறு, மணிமுத்தாறு, ஓங்கூர்.

2.விழுப்புரம் மாவட்ட நதிகள்: கோமுகி ஆறு, மலட்டாறு, மணிமுத்தாறு.

3.காஞ்சிபுரம் மாவட்டம்: அடையாறு, செய்யாறு, பாலாறு, வராகநதி, தென்பெண்ணை, பரவனாறு.

4.திருவண்ணாமலை மாவட்டம்: தென்பெண்ணை, செய்யாறு, வராகநதி, வெள்ளாறு.

5.திருவள்ளூர் மாவட்டம்: கூவம், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு

6.கரூர் மாவட்டம்: அமராவதி, பொன்னை.

7.திருச்சி மாவட்டம்: காவிரி, கொள்ளிடம், பொன்னை, பாம்பாறு.

8.பெரம்பலூர் மாவட்டம்: கொள்ளிடம்.

9.தஞ்சாவூர் மாவட்டம்: காவிரி, வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், அக்கினி ஆறு.

10.சிவகங்கை மாவட்டம்: வைகையாறு, பாம்பாறு, குண்டாறு, கிருதுமால் நதி,

11.திருவாரூர் மாவட்டம்: காவிரி, வெண்ணாறு, பாமணியாறு, குடமுருட்டி

12.நாகப்பட்டினம் மாவட்டம்: காவிரி, வெண்ணாறு.

13.தூத்துக்குடி மாவட்டம்: ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி, குண்டாறு, கிருதுமால் ஆறு, கல்லாறு, கோராம்பள்ளம் ஆறு.

14.தேனி மாவட்டம்: வைகையாறு, சுருளியாறு, தேனி ஆறு, வரட்டாறு, வைரவனாறு.

15.கோயம்புத்தூர் மாவட்டம்: சிறுவாணி, அமராவதி, பவானி, நொய்யலாறு, பம்பாறு.

16.திருநெல்வேலி மாவட்டம்: தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு, இராமநதி, மணிமுத்தாறு, பச்சை ஆறு, கறுப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடிஆறு, அனுமாநதி, கருமேனியாறு, கரமணை ஆறு. இவை தவிர, தாமிரபரணியின் துணை ஆறுகளான சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு, பேயனாறு, நாகமலையாறு, காட்டாறு, சோம்பனாறு, கௌதலையாறு, உள்ளாறு, பாம்பனாறு, காரையாறு, நம்பியாறு, கோதையாறு, கோம்பையாறு, குண்டாறு போன்றவையும் ஓடுகின்றன.

17.மதுரை மாவட்டம்: பெரியாறு, வைகையாறு, குண்டாறு, கிருதுமால் நதி, சுள்ளி ஆறு, வைரவனாறு, தேனியாறு, வரட்டாறு, நாகலாறு, வராகநதி, மஞ்சள் ஆறு, மருதாநதி, சிறுமலையாறு, சுத்தி ஆறு, உப்பு ஆறு.

18.திண்டுக்கல் மாவட்டம்: பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி, சண்முகாநதி, நங்கட்சியாறு, குடகனாறு, குதிரையாறு, பாலாறு, புராந்தளையாறு, பொன்னை, பாம்பாறு, மஞ்சள் ஆறு.

19.கன்னியாகுமரி மாவட்டம்: கோதையாறு, பறளியாறு, பழையாறு, நெய்யாறு, வள்ளியாறு.

20.ராமநாதபுரம் மாவட்டம்: குண்டாறு, கிருதுமால் நதி, வைகை, பாம்பாறு, கோட்டகரையாறு, உத்திரகோசமங்கை ஆறு.

21.தருமபுரி மாவட்டம்: காவிரி, தொப்பையாறு, தென்பெண்ணை

22.சேலம் மாவட்டம்: காவிரி, வசிட்டாநதி, வெள்ளாறு.

23.விருதுநகர் மாவட்டம்: கௌசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனா நதி, கிருதுமால் நதி.

24.நாமக்கல் மாவட்டம்: காவிரி, உப்பாறு, நொய்யலாறு.

25.ஈரோடு மாவட்டம்: காவிரி, பவானி, உப்பாறு.

26.திருப்பூர் மாவட்டம்: நொய்யலாறு, அமராவதி, குதிரையாறு.

27.புதுக்கோட்டை மாவட்டம்: அக்கினி ஆறு, அம்பூலி ஆறு, தெற்கு வெள்ளாறு, பம்பாறு, கோட்டகரையாறு.

மழைக் காலங்களில் மட்டுமே உயிர்பெறுகிற வேறு சில சிறு ஆறுகளையும் சேர்த்தால், பட்டியல் இன்னும் நீளும். தமிழ்நாட்டு நதிகளில் உள்ள நீர்த் தேக்கங்கள் / அணைகளைப் பட்டியல் போட்டால், குறிப்பிட்டுச் சொல்லும்படியான அணைகளே 50 இருக்கின்றன.

நாம் அழித்த நீர்நிலைகள்

தமிழகத்தில் இயற்கையின் அருட்கொடையான நதிகளையும், நீராதாரங்களையும் நாம் சரியாகப் பராமரிக்கவில்லை என்பதைத் தாமதமாக உணர்ந்திருக்கிறோம். மேலே சொன்ன பட்டியலில், பல நதிகள் தற்போது வரைபடங்களில் மட்டுமே இருக்கின்றன. நீர்நிலைகளின் நிலை அதைக் காட்டிலும் மோசம். நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் (அன்றைய சென்னை மாகாணத்துக்குள் இருந்த) இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர்நிலைகள் இருந்தன. இன்றைக்கு அது பாதிக்கும் குறைவாகிவிட்டது. வெறும் 20,000 நீர்நிலைகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

மதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி மட்டும் 500 ஏரிகள், குளங்கள் காணாமல் போய்விட்டன. பழவேற்காடு ஏரியை ஆந்திர அரசு சிறிது சிறிதாக அபகரித்துக்கொண்டது. சென்னைக்குக் குடிநீர் வழங்குகிற வீராணம் ஏரியிலும்கூட சரியான பராமரிப்பு இல்லை. அரசின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் இன்றைக்கு 18,789 பொதுப்பணித் துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் இருக்கின்றன. நிஜத்தில் எத்தனை என்பதை ‘சர்வே’ செய்துதான் கண்டறிய வேண்டும். நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் 1.10 கோடி ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலத்தின் பரப்பும் சுருங்கிக்கொண்டே வருகிறது.

இவை அனைத்திலும் அரசுக்கும், மக்களுக்கும், லாபவெறி கொண்ட ரியல் எஸ்டேட்காரர்களுக் கும் பங்கு உண்டு. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. நாகரிகத்தின் தொட்டிலான நதி களை அழித்தோம், விவசாயத்தின் ஆதாரமாக இருந்த நீர்நிலைகளைச் சீரழித்தோம். மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில் இருந்த நீர்நிலைகளின் எண்ணிக்கையில் பாதிகூட, இன்றைய 7 கோடித் தமிழ் மக்களிடம் இல்லை என்பது வரலாற்றுப் பிழை. செய்த தவறுகளைச் சுட்டிக்காட்ட அல்ல, குட்டிக்காட்டுவதற்கே இந்த வறட்சி வந்திருக் கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். எதிர் காலத் தலைமுறையும் குடிநீர் பஞ்சத்தில் இருந்து தப்பிக்க முடியும். தமிழகத்தில் பரவலாக இளைஞர்கள் குழுக்கள் நீர்நிலைகளையும், மறைந்துவிட்ட ஆறுகளையும் தேடத் தொடங்கி யிருப்பது நம்பிக்கை தருகிறது. ஆனால், சதவிகித அடிப்படையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. விளக்கி வைத்த வெள்ளிப் பாத்திரம்போல, மழைக்கு முன்பாக அனைத்து நீர்நிலைகளையும் மீட்டு, தூர்வாரி வைத்தால்தான் நாம் வறட்சியிலிருந்து விடுபட முடியும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories