வளமான நீராதாரத்தை பெற இந்த யுக்திகளை எல்லாம் பயன்படுத்துங்கள்..

நீர் மேலாண்மை:

மழையில்லா வறண்ட பகுதிகளின் மண் வளத்தைக் காக்க, பயிறு வகைப் பயிர்களை கலப்பு பயிராகவோ, ஊடுபயிராகவோ பயிரிட வேண்டும். மண் அரிப்பு தடுக்கவும் மண்வளத்தை மேம்படுத்தவும், மண் சரிவுப் பகுதியில் பழ மரங்களுக்கு இடையே கொழிஞ்சியை பயிரிடவேண்டும்.

‘நுணா’ மரம் இருந்தால், அதிக ஈரப்பதம் அம்மண்ணில் உள்ளதை அறியலாம். கோடைக்காலத்தில், ஆழ உழவு செய்தால் மண் ஈரப்பதத்தை காக்கலாம்.மண்ணை நன்கு உழவு செய்தால் மண் ஈரப்பதத்தை காக்கலாம்.மண்ணை நன்கு உழவு செய்து தூள் தூளாக்கினால், அதிக ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.செம்மண் நிலத்தில் கரும்மண் குளத்து மண்ணை இட்டால் நீர்ப்பிடிப்பு தன்மையை செம்மண் பகுதியில் அதிகரிக்கலாம்.

சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு செடியைப் பயிரிட்டு, பூப்பதற்கு முன் மடக்கி உழுதால் மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.எந்தவொரு நிலத்திற்கும், நாம் நடந்தால் நம் கால் தடம் பதியாமல் இருந்த அந்த சமயத்தில் நீர்ப்பாசனம் செய்தால் போதும்.

கிணற்றுக்கு அருகில் பூவரசு மரத்தை வளர்த்தால், நீரானது ஆவியாக மாறி வீணாவது தடுக்கப்படும்.நன்செய் நிலத்தில், ‘ஆரை’ கீரைக் கிளையும், தோட்டக்கால் நிலத்தில் ‘அருகு’ புல்லும் இருந்தால் நல்ல மகசூல் கொடுக்கும்.செம்மண் நிலத்தில் ‘அருகு’, ‘கரும்மண்’ நிலத்தில் ‘கோரையும்’ இருந்தால் அந்நிலம் நல்ல நிலம்.

களர் நிலத்தை சரி செய்ய சணப்புப் பயிரை விதைத்து அதை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதால் போதும்.களர் நிலத்தை மேம்படுத்த தக்கைப்பூண்டை பயிரிட்டு, அது பூப்பதற்கு முன் மடக்கி உழவு செய்யவேண்டும்.களர் நிலத்தை சரிசெய்ய பிரண்டையை இடலாம்.களர்நிலத்தில் வேப்பந்தழை இட்டால் சரியாகும்.உப்புநிலத்தை சரிசெய்ய வேப்பங்கொட்டை மேல் தோலை இடலாம்.

வேப்பம் புண்ணாக்கு இட்டால் உவர் தன்மை சரியாகும்.பனை மரத்தின் ஓலையை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை அதிகளவு நிலத்தில் இட்டால் களர் தன்மை சரியாகிவிடும்.புங்கம் இலையையோ, புளியம்பழத்தின் மேற்தோலையோ இட்டால் களர் நிலம் நல்ல நிலமாக மாறும்.

மட்கு உரத்துடன் தென்னை நார்க்கழிவை கலந்து இட்டால் களர் தன்மை மாறும். கரும்பாலை கழிவு, நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவு ஆகியவற்றை நிலத்தில் போட்டால் களர் தன்மை மாறும்.அரை நெல்லிக்காய் கிளைகளை கிணற்றில் இட்டால் உப்புத் தன்மையான நீர் நல்ல நீராக மாறும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories