கார் நெல்லின் தன்மை
இடுப்பளவு தண்ணீர் இருந்தால் கூட இந்த நெல் ரகத்தை அறுவடை செய்து கதிர்களை கயிறு கட்டி களத்துக்கு எடுத்து வந்து விடலாம்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஈரமாக இருந்தால் கூட அது காயும் வரை கலத்து மேட்டில் மூடி வைத்திருப்பார்கள் ஆனால் ஈழத்திலும் கூட நெல் முளைக்காது .இந்த சூழ்நிலையை வாரக் கணக்கில் கூட இருக்கலாம்.
கார் நெல் ரகம்ஈரத்தில் இருந்தாலும் மறு ஆண்டில் ஆடிப்பட்டத்தில் மட்டுமே முளைக்கும் தன்மை கொண்டது.
பாரம்பரிய நெல்லில் நடுத்தர ரகமாகவும் மத்திய கால பயிராகவும் இது உள்ளது.
ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இதற்கு தேவையில்லை இயற்கையில் கிடைக்கும் சத்துக்களை கிரகித்து கொண்டு விளைந்து மகசூல் கொடுக்கக்கூடியது.