குருவிக்கார் அரிசி :

குருவிக்கார் அரிசி :

 
குருவிக்கார் (Kuruvikar) பாரம்பரிய நெல் இரகங்களில் அதிக மகசூல் தரக்கூடிய நெல் இரகமாகும். இது பழுப்பு நிற அரிசியுடனான, மோட்டா (தடித்த) இரகமாகும். ஏனைய பாரம்பரிய நெல் இரகங்களைப் போலவே வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி வளரக்கூடிய குருவிக்கார் நெல், இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் எடுத்துக்கொண்டு வளரும் தன்மையுடையது. இவ்வகை நெற்பயிரில் சொரசொரப்புடனான கடினத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சி தாக்குதலிலிருந்து காக்கப்படுவதோடு, களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது.
 
தனித்துவம் :
 
குருவிக்கார் (Kuruvikar) இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும். குறைந்த தண்ணீரைக் கொண்டு, முழு வளர்ச்சியான ஐந்தடி உயரம்வரை வளரும். வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி மகசூல் கொடுக்கும். அதிக நெல் மணிகளைக் கொண்டிருக்கும். பயிரில் சொரசொரப்புத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சி தாக்குதல் இருக்காது. களை கட்டுப்படும். குருவிக்கார் நெல் ரகத்தில் அதிகமான மருத்துவக் குணங்களும் (Medicinal Value), புரதச் சத்துகளும் (Protein value) உள்ளன. நார்ச்சத்து (Fibre) அதிகம்.
 
ஒரு ஏக்கருக்கு இருபத்தைந்து முதல் முப்பது மூட்டைவரையில் மகசூல் கிடைக்கக்கூடிய இந்த நெல் இரகம், நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுவதோடு, தற்போது தமிழகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. பழுப்பு நிற அரிசியுடன் கூடிய மோட்டா (தடித்த) இரகமான குருவிக்கார், பெரும்பாலும் இட்லி, தோசை, இடியாப்பம், முறுக்குப் போன்ற பலகாரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வீட்டு விசேடங்களில் விருந்துக்கு இந்த இரக அரிசியை சம்பிரதாயமாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும், இதன் அவல் மிக ருசியாகவும், இதனன் பழைய சாதம் நெடுநேரம் தாங்கக்கூடியதாக இருப்பதோடு, இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்குப் பசியும் எடுக்காது.
 
குருவிக்கார் உண்பதால் ஏற்படும் பயன்கள் :
 
* இதன் பழைய சாதம் சீக்கிரமாகக் கெட்டுப் போகாது. இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்குப் பசியும் எடுக்காது.
 
* பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்தால், நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து சீக்கிரம் குணமடைவார்கள் (Recovery).
 
* குழந்தை பெற்ற தாய்மார்கள் இதைச் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் (Breast feeding) அதிகம் சுரக்கும். தாய்க்கு ஏற்பட்ட பலவீனம் நீங்கும்.
 
* கடுமையாக உழைப்பவர்கள் இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு (Physical fatigue) நீங்கும். நீண்ட நேரம் களைப்பு இல்லாமல் வேலை செய்யலாம்.
 
* நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டு உடல் வலிமை இழந்திருப்பவர்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டுவந்தால், இழந்த சக்தியை (Energy) மீண்டும் பெறலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories