கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்தில் 2021 2022ஆம் ஆண்டுகளும் சொட்டுநீர் பாசன திட்டத்தில் தோட்டக்கலை துறைக்கு அரசு ரூபாய் 5 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை கொண்டு 2550 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட உள்ளது இதில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது ஏழு ஆண்டுகளுக்கு முன் சொட்டு நீர் பாசனம் அமைத்த விவசாயிகளுக்கும் மானியத்தில் குறைகளை புதுப்பித்துக் கொள்ளலாம் மேலும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு பலவிதம் உபகரணங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது டீசல் பம்ப் செட் அல்லது மின் மோட்டார் பம்புசெட் ஒன்றுக்கு ரூபாய் 15,000, கிணறு, ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து வருவதற்கு குழாய்கள் ஒருத்தன் ஒருவர் சைக்கிள் ரூபாய் 10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது இதேபோல் தண்ணீரை தேக்க நிலை தண்ணீர் தொட்டிகள் அமைக்க ஒரு தொட்டிக்கு ரூபாய் 40 ஆயிரம் மானியம் வழங்கப்படும் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் உரிய சான்றுகளுடன் ஆனைமலை தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தோட்டக்கலை காய்கறி மற்றும் பழ வகைகளை சந்தைக்கு கொண்டு செல்வதில் பிரச்சனை இருந்தாலும் மழை பெய்ததால் காய்கறிப் பயிர்கள் சேதம் ஆனாலும் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர்களிடம் தெரிவித்து முதலாம் ஞாயிறு அன்று காய்கறி பழங்களை அறுவடை செய்வதை தவிர்த்து சனி அல்லது திங்கட்கிழமையில் அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் இந்த காலத்தில் நேரில் செல்வதை தவிர்த்து தொலைபேசி வாயிலாக தோட்டக்கலை உதவி இயக்குனரிடம் ஆலோசனையும் உதவியும் பெற வேண்டும்.