சாமை சாகுபடி: ரகங்கள் முதல் அறுவடை வரை ஒரு அலசல்

சாமை சாகுபடி

சாமையின் ரகங்கள்:

கோ 3, கோ (சாமை4), பையூர்2, கோ1 ஆகிய ரகங்கள் உள்ளன.

பருவம்:

ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்:

சித்திரை வைகாசி மாதங்களில் இறக்கை கலப்பை அல்லது மரக்கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு ஆழமாக உழுது நிலத்தை சமன் செய்ய வேண்டும்.

விதையளவு:

கை விதைப்பு முறை மூலம் விதைக்கும் போது ஏக்கருக்கு 12.5 கிலோ விதை தேவைப்படும்.

கொர்து அல்லது விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்யும் போது ஏக்கருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.

இடைவெளி:

பயிர் இடைவெளியானது 22.5 செ.மீ – 7.5 செ.மீ இருக்க வேண்டும்.

உர நிர்வாகம்:

ஒரு ஏக்கர் நிலத்தில் 5 டன் மட்கிய தொழு உரத்தை கடைசி உழவின் போது பரப்பி, பின்னர். உழ வேண்டும். தழை மணிசத்துக்களை ஏக்கருக்கு முறையே 44:22 கிலோ அளவில் இட வேண்டும்.

களை நிர்வாகம்:

வரிசை விதைப்பு செய்திருந்தால் இரண்டு முதல் மூன்று முறை இடை உழவு செய்து பின் ஒரு முறை கையினால் களையெடுக்க வேண்டும் . கை விதைப்பு முறையில் இரண்டு முறை கையினால் களையெடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்:

சாமைப் பயிர் நன்கு வளர்வதற்கு 300 முதல் 350 மீ.மீ. மழை அளவு தேவைப்படும். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் விதைப்பு நீர், பூக்கும் பருவம், பால் பிடிக்கும் பருவங்களில் கட்டாயம் மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.

பயிர் களைதல்:

முதல் களை எடுத்தவுடன் அல்லது விதைத்த 20 – ம் நாளில் மானாவாரி பயிரில் வரிசைக்கு வரிசை 22.5 செ. மீ மற்றும் செடிக்கு செடி 7.5 செ.மீ வைத்து பயிர் களைய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

இந்த பயிரை பொதுவாக எந்த நோயும் தாக்குவதில்லை. குருத்து ஈ சாமையை தாக்கி விளைச்சலை மிகவும் பாதிக்கிறது. இந்த பூச்சியை கட்டுப்படுத்த விதைப்பை தள்ளிப்போடாமல் பருவமழை தொடங்கிய உடன் விதைக்கலாம்.

அறுவடை:

கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories