தேங்காய்ப்பூ சம்பா அரிசி :

தேங்காய்ப்பூ சம்பா அரிசி :

 
பாரம்பரிய நெல் ரகங்களிலேயே மிகவும் வித்தியாசமான நெல் ரகம் இது.
 
தனித்துவம் :
 
தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே மிகவும் வித்தியாசமான நெல் இரகமான இது, மேற்கு வங்க மாநிலத்தில் (West Bengal) இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் (Bangladesh) இடையேயான இந்திய எல்லையின் ஓரமாக இச்சா ஆறு பாயும் (Delta region) பகுதியில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. வங்க மொழியில் வேறுபெயரில் அழைக்கப்படும் இவ்வகை நெல், பொரி தயாரிப்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது. மணல், மணல் சார்ந்த பகுதிக்கும் கடலோரப் பகுதிக்கும் ஏற்ற இரகமாகவும் உள்ள இது, நான்கு அடி உயரம் வரை வளரக்கூடியது. கொஞ்சம் சாயும் தன்மையுடன் இருந்தாலும், அறுவடையில் பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.பொதுவாக நெல் மணிகள், இதழ் இதழாக இருக்கும். ஆனால், தேங்காய்ப்பூ சம்பா கொத்துக் கொத்தாக இருக்கிறது. மஞ்சள் நிறத்தாலான இந்நெல், வெள்ளை அரிசியுடன் கூடிய மோட்டா (தடித்த) இரகமாகும்.
 
மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த தேங்காய்ப்பூ சம்பா, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், சம்பா பட்டம் எனப்படும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்ற நெல் இரகமாகும்.
 
நடவு செய்யவும், தெளிக்கவும் ஏற்றது. ஏக்கருக்கு இருபத்து ஐந்து கிலோ விதை போதுமானது. மகசூல் இருபத்தி இரண்டு மூட்டைவரை கிடைக்கும்.
 
தேங்காய்ப்பூ சம்பா பயன்கள் :
 
* தமிழகத்தில் பொரி (Puffed Rice) பயன்பாடு அதிகளவில் இருப்பதால், அதற்கான புதுப்புது இரகங்களுக்கு ஆராய்ச்சி நிலையங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. பாரம்பரிய நெல் இரகங்களில் பொரிக்கு ஏற்ற இரகமாக, தேங்காய்ப்பூ சம்பா இருக்கிறது.
 
* எளிதில் ஜீரணம் (Easily Digestible) ஆக கூடிய உணவு.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories