நெல்லில் ஊடுபயிர்கள்

 

வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும். இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும்.

இதனால் ஏராளமான பொறி வண்டுகள் கவரப்படும் .இந்த பொறி வண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

நெற்பயிரில் ஊடுபயிராகமணிலா, அகத்தி, பயறு வகைகள், வெண்டை போன்றவையும் பயிரிட்டு .லாபம் பெறலாம்.

நிலக்கடலையில் ஊடுபயிர்

ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால் புரோட்டியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.

நிலக்கடலை யோட 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் பூச்சி இலைப்பேன் மற்றுஅந்துப்பூச்சிசேதத்தை கட்டுப்படுத்தலாம்.

10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை என்ற அளவிலும் ஊடுபயிராக செய்து பொறி வண்டுகளின்பெருக்கத்தை அதிகரிக்கலாம்.

சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் காணப்படும் பகுதிகளில் 5 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை தட்டை பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories