பிபிடி 5,204 ரகத்துக்கு மாற்று ரகம் டிகேஎம் 13; 6 டன் மகசூல் தருமாம்…

தற்போதைய பருவத்தில் டிகேஎம் 13 ரக நெல்லைப் பயிரிட்டால் ஹெக்டேருக்கு 6 டன் மகசூல் கிடைக்கும்.

திருவள்ளூரை அடுத்த திரூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் டிகேஎம் 13 என்ற நெல் ரகம் வெளியிடப்பட்டது.

இந்த ரகமானது பிபிடி 5,204 ரகத்துக்கு மாற்று ரகமாகும். இதன் வயது 130 நாள்களாகும். இது காவிரி டெல்டா பகுதியில் தாளடிப் பட்டத்துக்கும் (செப்டம்பர் விதைப்பு) இதர மாவட்டங்களுக்கு சம்பா பட்டத்துக்கும் (ஆகஸ்ட்- செப்டம்பர்) விதைப்பு ஏற்றது.

இது ஹெக்டேருக்கு 5,938 கிலோ மகசூல் கொடுக்க வல்லது. மத்திம, சன்ன ரக வெள்ளை அரிசியைக் கொண்டது.

அதிக அரைவைத்திறன், முழு அரிசி காணும் திறன், சிறந்த சமையல் பண்புகளுடன், நல்ல சுவையும் கொண்டது இந்த நெல்.

இது இலைச் சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், செம்புள்ளி நோய், இலை உறை அழுகல் நோய்களுக்கு நடுத்தர எதிர்ப்புத்திறன் கொண்டது. நெல்கதிர் சாயாத தன்மை கொண்டது..

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories