மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா நெல் ஆராய்ச்சிகளுக்கு ஒப்பந்தம்! வேளாண்மை துறை தகவல்!

மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தில் மருத்துவகுணம் உள்ளதென நிரூபிக்க மெட்ராஸ் டயபடீஸ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நபார்டு வங்கி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்(அபிடா) சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மதுரையில் நடைபெறுகிறது. 165 ஸ்டால்கள் கண்காட்சியில் இடம்பெற்றுஉள்ளன. இன்றும் கண்காட்சி நடக்கிறது. நபார்டு வங்கி பொது மேலாளர் பைஜூ குரூப், போட்டான்அமைப்பு தலைவர் நாச்சிமுத்து, கல்லுாரி டீன் பால்பாண்டி கலந்து கொண்டனர். மதுரை வேளாண் தொழில் முனைவோர் உருவாக்கும் மையம், பாட்டன் நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளது என்றார்.

இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசிய வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார், ”கோவை ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம், மதுரை விவசாய கல்லுாரியில் 120க்கு மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன எனவே,

பாரம்பரிய நெல் ஆராய்ச்சிகளுக்கு ஒப்பந்தம்
மாப்பிள்ளை சம்பா ரகத்திலேயே 40 வகைகள் உள்ளதால் அதில் சிறந்ததை கொடுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். மேலும், மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தில் மருத்துவ குணம் உள்ளதென நிரூபிக்க மெட்ராஸ் டயபடீஸ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம் என்றும், வி.ஜி.டி சீரக சம்பா இருமடங்கு மகசூல் தரக்கூடியது. ஆண்டு முழுதும் சாகுபடி செய்வது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருதாக கூறினார்.

புதிய தொழில்நுட்பங்கள் வேண்டும்
அபிடா தலைவர் அங்கமுத்து பேசுகையில், ”விவசாயமும் சந்தைப்படுத்தலும் எளிதல்ல. ஐரோப்பிய நாடுகளில் ஒரு பொருளை வாங்க வேண்டுமெனில், விதைப்பது, அறுவடை, தொழில்நுட்பம் உட்பட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் என்றார். கழனி அமைப்பினர் வாழையில் இத்தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளனர்.இதேபோல தேனி திராட்சைக்கும் கொண்டு வரவேண்டும்” என்றார் அவர்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories