மாப்பிள்ளை சம்பா, மோட்டா சிவப்பரிசி நெல் சாகுபடி முறை

தினமும் 48 நாட்கள் மாப்பிள்ளை சம்பா அரிசி சாதம் சாப்பிட்டு வந்தால் இளவட்ட கல் துாக்கும் அளவு உடல் வலிமை அடியும் . மாடு அடக்கி வெற்றி பெறலாம் என, அந்தக்கால முன்னோர்கள் நிரூபித்துள்ளனர்.

இதன் பெருமைக்காகவே மாப்பிள்ளை சம்பா அரிசியை சாகுபடி செய்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்

அவர் கூறியது:

2 ஏக்கர் நிலத்தில் கம்போஸ்டர், நுனா, புங்கை, பூவரசு, வேம்பு, எருக்கு தழை சேர்த்து உழவேண்டும்.
கம்போஸ்டர் உரத்தை நிலத்திலேயே தயார் செய்தார் .
ஒன்றரை அடி ஆழ பள்ளத்தில் மாட்டுச்சாணம், கோமியம், நிலக்கடலை புண்ணாக்கு, வெல்லக்கரைசல் சேர்க்கவேண்டும். குழியைச் சுற்றி 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு கரைசலை ஊற்றவேண்டும்.
இதன்மேல் வைக்கோல் பரப்பி 10 நாட்கள் விடவேண்டும். இந்த கம்போஸ்ட் உரத்தில் மண்புழுக்கள் அதிகளவில் உருவாகியிருந்தன. இந்த மண்புழு உரம் தான் நெல்லுக்கு போட்டார் .
ஏக்கருக்கு 10 முதல் 20 கிலோ மாப்பிள்ளை சம்பா நெல்லை விதைத்தார் . நாற்றாக வந்ததும் ஒவ்வொரு நாற்றாக பிரித்து கயிறு கட்டி வரிசை முறையில் வயலில் நட்டார் . காய்ச்சலும் பாய்ச்சலுமாக அவ்வப்போது தண்ணீர் ஊற்றி வளர்த்தால் மண்ணின் தன்மை கெட்டிப்படும்.
இதனால் நெற்பயிரின் வேர் தண்ணீரைத் தேடி ஆழமாக தரையில் செல்லும். இதனால் புயல், மழை வந்தாலும் பயிர் சாயாது.
நான்கரை மாதத்தில் கதிர் கட்டும்.
தரையில் ஜீவாமிர்த கரைசலும் மேற்பரப்பு கதிரில் பஞ்சகவ்யம் ஸ்பிரே செய்ய வேண்டும். இதனால் நெல்லில் பூச்சி தாக்குதல் வராது.ஆறுமாதத்தில் ஆறு அடி உயரத்தில் கதிர் முற்றி அறுவடை செய்யலாம். இது மோட்டோ ரகம். பெரிதாக சிவப்பு நிறத்தில் அரிசி இருக்கும்
இதை ஒரு சில மில்லில் தான் அரிசியாக்குவர். உடலுக்கு வலுவேற்றும் இந்த அரிசி தற்போது இருப்பில் வைத்துள்ளேன். அடுத்ததாக ராஜாக்கள் சாப்பிடும் காட்டுயாணம் நெல் உற்பத்திக்கு நிலம் தயாராக உள்ளது என்று கூறினார் .
இவருடன் பேச 8489257710

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories