ரகம் – கோ 43 , ஐஆர்20, ஏடிடி 39. நெல் சாகுபடி தொழில் நுட்பம்

நெல் சாகுபடி தொழில் நுட்பம்
ரகம் – கோ 43 , ஐஆர்20, ஏடிடி 39.
விதையின் அளவு 30 கிலோ – ஏக்கர்
உழவு 3முதல் 4 முறை நிலத்தை சமம் செய்ய வேண்டும்
வயல் பராமரிப்பு முறை
தக்கைப்பூண்டு, ஆவாரை , கொளுஞ்சி, கொள்ளு,எருக்கு வேப்பஇலை இவைகளைப் போட்டு வயலில் நன்றாக மிதிக்க வேண்டும் மறுபடியும் சமன் செய்ய வேண்டும்
அடியுரம்
பசுந்தால் உரங்களை வளர்த்து தண்ணீர் விட்டு இரண்டு நாள் ஊறவைக்க வேண்டும் பின்னர் சகதி நன்கு சேரும் அளவிற்கு இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா சூடோமோனஸ் ஒவ்வொன்றிலும் 2 கிலோ வீதம் 100 கிலோ தொழுவுரத்துடன் கலந்து ஒரு வாரம் வைத்திருந்து பிறகு நடவு வயலில் இட வேண்டும்.
நாற்றங்கால்
நாற்றங்காலில் நெல்லை முதல்நாள் ஊறவைத்து விதைத்து அவற்றின்மேல் மண்கொண்டு மூடி பூவாளியில் தண்ணீர் தெளிக்கவும் 20- 25 வயதுடைய நாற்றுக்களை எடுத்து நடவு செய்யலாம் வேர்பகுதி இத்துவிடாமல் பார்த்து நாற்றுகளை எடுத்து விதை நேர்த்தி செய்து நடவு செய்யனும்
நாற்று நடவு முறை
நாற்றங்கால் இறுகி இருந்தால் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 5 கிலோ ஜிப்சம் இடவேண்டும். நாற்றை பிடுங்கி ஒரு ஓரத்தில் நீரை தேக்கி அதில் 600 கிராம்; அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்;போபாக்டீரியா போட்டு அதில் நாற்றின் வேர்பகுதியை நனைத்து ஒரு குத்துக்கு 2அல்லது 3 நாற்றுக்கள் நடவு செய்ய வேண்டும்.
உயிர் உரம்
2 கிலோ அசோஸ்பைரில்லம் 2கிலோ பாஸ் போபாக்டீரியா மக்கிய தொழு எரு 100 கிலோவுடன் கலந்து வயலில் நடவு செய்த 20- 25 நாட்களில் தூர்கட்டும் சமையத்தில் திரும்பவும் ஒரு முறை போடவேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்த 30 நாட்கள் வரை 2 செ.மீ தண்ணீர் இருந்தால் போதுமானது.
உர நிர்வாகம்
வேப்பம் புண்ணாக்கு10 கிலோ 25 கிலோ ஜிப்சம் இவற்றை அரைலிட்டர் மண்ணெண்ணெயுடன் கலந்து 24 மணி நேரம் கழித்து மாலை வேலையில் நெல் தூர் கட்டும் சமையத்தில் இடுதல் வேண்டும்.
நுண்ணூட்டம்
ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்டம் இடவேண்டும். உவர் நிலமாக இருந்தால் 12 கிலோ ஜிங்;க்; சல்பேட் 20 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும்
களை நிர்வாகம்
22 வது நாள் முதல் களை, 45 வது நாள் இரண்டாவது களை எடுக்க வேண்டும்.
சாறுஉறிஞ்சும் பூச்சிகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி தாவர இலைச்சாறு என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம் அல்லது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலை ஒரு லிடடர் தண்ணீருக்கு 2மில்லி என்ற அளவில் கலந்து அடிக்கலாம்
பயிர் நன்கு செழிப்பாக இருந்தால் பூச்சியின் தாக்குதல் இருக்கு விளக்குப்பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
பஞ்சகவ்யா அல்லது அமிர்தக்கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து வரலாம். தூர்கட்டும் சமையம், கதிர் பால்பிடிக்கும் சமையத்தில் கண்டிப்பாக தெளித்துவரவும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories