பட்டங்கள் பற்றி கூறவும்?
நவரை அல்லது கோடைப ட்டமானது ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள மாதங்களையும் ,கார் ப ட்டமானது ஜூன் முதல் செப்டம்பர் அக்டோபர் வரை உள்ள மாதங்களையும், குருவை பட்டம் ஆனது ஜூன் ஜூலை முதல் அக்டோபர் நவம்பர் வரை உள்ள மாதங்களையும், முன் சம்பா ப ட்டமானது ஜூன் ஜூலை முதல் நவம்பர் டிசம்பர் வரை உள்ள மாதங்களையும் ,சம்பா சட்டமானது ஜூலை ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை ஜனவரி வரை உள்ள மாதங்களையும், தாளடி அல்லதுபி சானம் செப்டம்பர் அக்டோபர் முதல் பிப்ரவரி மார்ச் வரை உள்ள மாதங்களையும், பின் சம்பா பட்டம் ஆனது அக்டோபர் நவம்பர் முதல் மார்ச் ஏப்ரல் வரை உள்ள மாதங்களையும் குறிக்கிறது.
இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றம் என்ன?
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் பயிர்களுக்கு அனைத்து சத்துக்களையும் எளிதாக கிடைக்கச் செய்யலாம்.
நாளுக்கு நாள் நிலத்தின் தன்மை மிருதுவாகி நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகமாகும்.
கரும்பில் வேர் புழு த் தாக்குதலை எப்படி கட்டுப்படுத்தலாம்?
கரும்பு பயிரில் கட்டுப்படுத்த உயிரியல் முறையே மிகச்சிறந்ததாகும்.
அந்தவகையில் இப்புழுக்களை தாக்கு ம் எத்திரோப்பைடீஸ் இண்டிகா என்ற நூற்புழுக்கள் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதங்களில் ஏக்கருக்கு 6 கிலோ என்ற விகிதத்தில் தொழு உரத்துடன் கலந்து வயலில் ஈரப்பதம் இருக்கும் போது இடலாம்.
அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது?
புகையிலை அரை கிலோ ,பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ ,வேப்பிலை 5 கிலோ ஆகியவற்றை சேர்த்து அரைத்து 15 லிட்டர் கோமியத்தில் கரைக்க வேண்டும்.
இதை நான்கு முறை கொதிக்க வைத்து இறக்கிய பிறகு 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிருக்கு தெளிக்க வேண்டும்.
கன்றுகளுக்கு எப்பொழுது கொம்பு நீக்கம் செய்ய வேண்டும்?
கன்றுகளுடன் கொம்புகளின் வளர்ச்சி இளம் வயதிலேயே நிறுத்தி கொம்பின் குருத்து பகுதி அழைக்கப்படும் முறை கொம்பு நீக்கம் செய்தல் ஆகும். .
கொம்பு நீக்குவதற்கான சரியான வயது கன்றின் முதல் பதினைந்து முதல் இருபது நாட்கள். கொம்புகளை நீக்குவதால் கொம்பு பகுதியில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.