கோடை நெல் உழவில் மேற்கொள்ள வேண்டிய பூச்சி மேலாண்மை பற்றி தகவல்!

கோடை நெல் உழவின்போது இலைப்பேன், குருத்துப்பூச்சி ஆகியவற்றால் மகசூல் இழப்பைத் தடுக்க உரிய பூச்சு மேலாண்மை முறைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் மகசூல் இழப்பை தடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது எனவே,

கோடை உழவு – பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு
இதுதொடர்பாக வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திப்பில், நடப்பு கோடை பருவத்தில் மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி, மதுரை மேற்கு, மேலூா், திருப்பரங்குன்றம், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூா் வட்டாரங்களில் 3 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 30 முதல் 60 நாள்கள் பயிராக உள்ளது. தற்போது நிலவும் தட்பவெப்பநிலையின் காரணமாக நெற் பயிரில் இலைப்பேன், குருத்துப் பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

பூச்சி மேலாண்மை முறைகளை பயன்படுத்த அறிவுரை
வறண்ட வெப்பநிலை காலங்களில் நெற்பயிரில் இலைப்பேன்கள் அதிகளவில் பெருகி இலையில் உள்ள சாற்றினை உறிஞ்சி, பச்சையம் சுரண்டப்படுவதால் இலையின் நுனி சுருண்டு காய்ந்து காணப்படும். அதேபோல, குருத்துப் பூச்சியின் புழுக்கள், இளம் பயிரின் தண்டில் துளையிட்டு உண்பதால் நடுக்குருத்து காய்ந்து, கதிா் பிடிக்கும் தருணத்தில், மணிகள் பால் பிடிக்காமல் சாவியாகி மகசூல் இழப்பு ஏற்படும்.
இலைப்பேன் மற்றும் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories