சப்போட்டாவின் பயன்கள்

சப்போட்டா பழத்தை அரைத்து அதன் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்படாது .இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மேனியைப் பளபளப்பாக வைக்க உதவும்.

சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல் ,வயிற்று வலி, வயிற்று எரிச்சல் இவற்றைப் போக்கும்..

சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கும் முன்பு ஒரு டம்ளர்தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால் நிம்மதியான தூக்கம் ஏற்படும்.

லிச்சி பழத்தின் பயன்கள்

இதயமும் ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம் வைக்கிறது.

இப்பழத்தில் புரதம், கொழுப்பு ,நார்ச்சத்து ,கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு ,தையாமின், மாலிக் அமிலம் ,சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு லிச்சி பழம் உண்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும்.

இருமல் சளி காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது .மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் இந்தப்பழம் சிறந்ததாகும்.

லிச்சி பழம் தினமும் உண்டு வந்தால் ,இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories