தென்னையில் காண்டாமிருக வண்டுத் தாக்குதல்-எப்படி கட்டுப்படுத்தலாம்

தென்னை மரங்களை அடிக்கடித் தாக்கும் காண்டாமிருக வண்டுகளை சாதுர்யமான முறையைப் பயன்படுத்திக், கட்டுப்படுத்துவது சற்றுக் சவாலான விஷயம்தான். இருப்பினும் இதை முறையாகச் செய்து வந்தால், காண்டாமிருக வண்டுகளை கூண்டோடு ஒழிக்க முடியும்.

தென்னை மற்ற மரங்களைப் போல இல்லாமல் ஆண்டு முழுவதும், பூத்துக் காய்த்து விவசாயிகளுக்குப் பலன் தருகிறது. எனவே தினசரி வளர்ந்து கொண்டே இருக்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த தென்னையில் பல்வேறு வகையான பூச்சிகள், வண்டுகள், ஈக்கள், சிலந்திகள் தாக்குகின்றன.

அவற்றில் வண்டுகளில் மிகவும் தாக்கக்கூடிய கண்டாமிருக வண்டுகள் மிக முக்கியமானவை. ஏனெனில் இவைத் தென்னை மரங்களை வேகமாகப் பதம்பார்த்து விடுகின்றன. எனவே காண்டாமிருக வண்டுகளின் தாக்குல் அறிகுறிகள், தடுப்பு முறைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகிறது.

அறிகுறிகள்
இந்த வண்டு இளம்குருத்து ஓலையைக் குடைந்து திண்பதால், ஓலை விரிந்த பின், வரிசையான சிறு துளைகளைக் காணலாம் என்றார்.

மேலும் மையத் தண்டின் இருபுறமும் ஒலை ஒரே மாதிரியான ‘வி’ வடிவில் வெட்டப்பட்டு இருக்கும்.

சிறிய கன்றில் தாக்கப்படும் போது மரம் காய்ந்து போகும். பெரிய மரங்களில் தாக்கும் போது வளர்ச்சிக் குன்றி, காய்கள் உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துவிடுகிறது.

 

தடுப்பு முறைகள்
தென்னந்தோப்பில் உரக்குழிகளை அமைக்க கூடாது. அவ்வாறு இருந்தால் மெட்டாரைசயம் அனிசோபிலை 1 கிலோ நீரில் கலந்து குப்பைக் குழியில் தெளிக்க வேண்டும்.

ஆமணக்கு- பிண்ணாக்குக் கரைசல் அரையடி பானையை தரையோடு தரையாக, தென்னந்தோப்பில் 10 இடங்களில் வைக்க வேண்டும்.

அதில் கால் கிலோ ஆமணக்கு பிண்ணாக்கு, பப்பாளி காய்சிறு துண்டு, வடிகஞ்சி, பானை நிரம்பும் அளவு தண்ணீர ஊற்றி வைக்க வேண்டும்இதில்

நன்கு புளித்த வாசனைக்கு, மரத்தில் உள்ள வண்டுகள் கவரப்பட்டு கீழே வந்து பானையில் விழும். அவற்றை அரித்து எடுத்து அப்புறப்படுத்தலாம்.

தொடர்ந்து 3 மாதங்கள் பல்வேறு இடங்களில் மாற்றி மாற்றி வைக்க வேண்டும்.

இதன் காரணமாக காண்டாமிருக வண்டுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.

தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை
94435 70889.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories