அசோஸ்பைரில்லம்,பாஸ்போபேக்டீரியா போன்ற உயிர் உரங்களை தென்னை மரத்திற்கு இ டுவதால் உண்டாகும் நன்மைகளை கூறுக?
அசோஸ்பைரில்லம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்துவதோடு பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்கின்றது இதனால் பயிர்களின் வேர்களும் தண்டு பாகமும் இலைகளும் வேகமாக வளர்கின்றன.
பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் மண்ணிலுள்ள கரையாத மணிச்சத்தை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் கொடுக்கிறது. இது பாக்டீரியா இனத்தைச் சார்ந்தது அனைத்து வகை ப யர்களுக்கும் பயன்படுகிறது. இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும்.
நிழலில் விளையும் காய்கறிகள் எவை?
தக்காளி, மிளகாய் ,கீரை வகைகள் மற்றும் சேப்ப கிழங்கு போன்ற பயிர்களை நிழலில் வளர்க்கலாம்.
மா மரத்தின் காய்களை எந்த முறையில் பழுக்க வைக்கலாம்?
நாள்பட்ட வைக்கோலை பரப்பி அதன் மீது காய்களை அடுக்கி வைக்கோலால் மூடி விடவேண்டும் வைக்கோலில் இருந்து வரும் வெப்பத்தினால் காய்கறி ஓரிரு தினங்களில் பழுத்துவிடும்.
சூரிய ஒளி புகாத இருட்டுஅறையில் காய் களை அடுக்கி வைத்தால் அறையின் வெப்பம் கூடி புழுக்கம் உண்டாகும் இதன் காரணமாகவும் காய்கள் பழுத்து விடும்.
வேப்பம் இலை ,நொச்சி இலை ,ஆவாரம் இலை என்று ஒவ்வொரு பகுதியிலும் இயற்கையாகக் கிடைக்கும் இலை தழைகளை பயன்படுத்தியும் பழுக்க வைக்கலாம்.
பப்பாளியில் வைரஸ் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
ஒரு லிட்டர் நீருக்கு டிரைகோடெர்மா விரிடி ஐந்து கிராம் என்ற விகிதத்தில் கலந்து நீர்ப்பாசனம் மூலம் விடலாம் அல்லது மரத்தின் மீது தெளித்து விடலாம்.
கன்று நடுவதற்கு முன்பு டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு கன்றின் வேறை நனைத்து பிறகு நடலாம். இதன்மூலம் பப்பாளியில் வைரஸ் நோயை கட்டுப்படுத்தலாம்.
சம்பங்கி பூச்செடியில் கோழி எருவை உரமாக பயன்படுத்தலாமா?
மக்கிய கோழி எருவை குறிப்பிட்ட அளவில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் மட்காத கோழி உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மடங்காத கோழி எருவைப் பயன்படுத்தினால் எருவின் சூட்டின் காரணமாக செடிகள் கருகி விடும் வாய்ப்பு உள்ளது.