மழையால் பாதிக்கப்பட்ட மலர் செடிகளுக்கு புத்துயிர் அளித்து வயலில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றிவிட்டு செடிகளின் வேர்களில் மண் அணைத்து பாதிக்கப்பட்ட மற்றும் காய்ந்த கிளைகளையும் உயரமாக வளர்ந்து உள்ள கிளைகளை வெட்டிவிட வேண்டும்.
பிறகு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா , டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனஸ் போன்ற நுண்ணுயிர் உரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை ஏக்கருக்கு தலா ஒரு கிலோ வீதம் நன்கு மக்கிய தொழுஉரம் கலந்து இடவேண்டும். இந்த நுண்ணுயிரிகளால் செடிகளின் வேர்கள் வேகமாக வளர்ந்து மண்ணில் உள்ள சத்துக்களை செடிகளுக்கு உடனடியாக அளிப்பதால் செடிகள் புத்துயிர் பெறும்.இதனால் 15 நாட்களுக்குள் செடிகள் மீண்டும் செழிப்பாக வளர தொடங்கும். பிறகு பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட உர அளவை தழை மணி, சாம்பல் ,சத்துக்களை 60: 120: 120 கிராம் அல்லது செடி வீதம் இட வேண்டும்இது போல மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உரங்களை பிரித்து வருடத்திற்கு நான்கு தடவைகள் இட வேண்டும். இதனால் பூக்களின் மகசூல் ஒரே சீராக கிடைக்கும்.