வாடல் நோயைத் தீர்க்கும் திறன் நுண்ணுயிரி – தயாரித்தல்!

வாடல் நோயில் இருந்து தென்னையைப் பாதுகாக்க பல்வேறு இயற்கை மருந்துகள் இருந்தாலும், முக்கிய பங்களிப்பது திறன் நுண்ணுயிரி. இதனை எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் (Ingredients)
10க்கும் மேற்பட்ட மரம், செடி, கொடிகளின் வேர் பகுதி மண் – அரை கிலோ

பரங்கிப்பழம் – 2 கிலோ

பப்பாளிப் பழம் – 2 கிலோ

சாராய வெல்லம் – 1 கிலோ

நாட்டுக்கோழி முட்டை 2 அல்லது 3

குடிநீர் தேவையான அளவு

வாய் அகன்ற பிளாஸ்டிக் பாத்திரம்

(20 முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும்)

தயாரிப்பு முறை (Preparation)
நன்று செழிப்பான நோய் தாக்கம் இல்லாத 10 வகையான மரம், செடி, கொடி வகைகளின் வேர்ப்பகுதியில் இருந்து வேர் மற்றும் மண்ணை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மரம், செடி, கொடி வகைகளில் இருந்து 500 கிராம் வீதம் 10 மரம், செடி கொடி வகைகளில் இருந்து மண்ணை சேகரிக்கலாம் என்றார்.

இதனை பிளாஸ்டிக் பாத்திரத்தில் இடவும். அவற்றுடன் பரங்கி, பப்பாளிப்பழம் மற்றும் சாராய வெல்லம் ஆகியவற்றை பிசைந்து போட வேண்டும்.

பிறகு நல்ல தண்ணீரை, மண், பப்பாளி, பரங்கி, வெல்லத்தில் மூழ்கும் வகை ஊற்ற வேண்டும்.

பின்னர் முழு நாட்டுக்கோழி முட்டையை அதனுள் போட வேண்டும்.

பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு மூடி, நிழலில் வைக்க வேண்டும்.

காற்றோட்டத்திற்காக காலையிலும், மாலையிலும் பிளாஸ்டிக் பாத்திரத்தை திறந்து வைக்க வேண்டும்.

30 நாட்களுக்குப் பிறகு திறன் நுண்ணுயிரிக் கலவையைப் பயன்படுத்தலாம். 6 மாதம் வரை இக்கலவையைப் பயன்படுத்தலாம்.

எப்படிப் பயன்படுத்துவது?(How to use)
பாதிக்கப்பட்டத் தென்னையின் அடிப்பாகத்தில் மூடாக்கு எனப்படும் முறையைக் கையாண்டு (தென்னை ஓலை அல்லது மட்டையால் வேர் பகுதியை மூடுதல்) அதன் மேல் நுண்ணுயிரிக் கலவையை ஊற்ற வேண்டும்.

30 லிட்டர் நீருடன் (Water) 1 லிட்டர் என்ற அளவில் திறன் நுண்ணுயிரியைத் தெளிக்கலாம்.
இக்கலவையைப் பயன்படுத்துவதன் மூலம், மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இதனால் இடுபொருள் செலவு குறைவதுடன் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துதல், குறைவான கூலி, காய்களின் நிறம், வடிவம், அளவு மற்றும் சுவை அதிகரிப்பதைக் கண்கூடாகக் காணமுடியும். திறன் நுண்ணுயிரி, பஞ்சகவ்யா ஆகியவை கலவை வாடல் நோயால் மரம் பாதிக்காத வகையில் பாதுகாக்கிறது என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories