குறைந்த நுட்ப பசுமைக் கூடம்
குறைந்த நுட்ப பசுமை கூடம் என்பது இயல்பாக கிடைக்கும் மூங்கில் ,மரக்கட்டை போன்றவற்றை கூண்டு அமைப்பது ஆகும். இதனிடையே புற ஊதா சவுக்கை முடக்கு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் வலைகள் போன்ற பொருட்களை பயன்படுத்திய வெளிச்சத்தை குறைக்கலாம் .கோடைகாலத்தில் கதவுகளை திறந்து விடுவதன் மூலம் வெப்பத்தினை குறைக்கலாம். இந்த அமைப்பானது மழைக்காலத்தில் பயிர்களை பாதுகாக்க ஏதுவாக இருக்கும். பாலித்தீன் பைகளில் அமைக்கப்பட்டிருந்த ஆளும் வெப்பநிலை அதிகரித்து விடும் எனவே அந்த அமைப்பு குளிர் காலங்களுக்கு ஏற்றதாக அமையும்.
மித நுட்ப பசுமைக் கூடாரம்
இந்தபசுமை கூடம் துத்தநாகம் பூசிய இரும்பு குழாய்களைக் கொண்டு அமைக்கப்படுகிறது. மேல் அமைக்கப்படும் மூடாக்கு திருகாணி மூலம் கட்டமைப்புடன் இணைக்கப்படுகிறது. வெப்பநிலை கருவியுடன் விசிறியும் பயன்படுத்தப்பட்டு தட்பவெப்ப நிலை கட்டுப்படுத்தப்படுகிறது. காற்றின் ஈரப்பதத்தை தக்க வைக்க குளிர்தண்டுகள் மற்றும் மென்பனி அமைவு முறைகள் பொருத்தப்படுகின்றன. இம்முறையில் மிகுந்த ஈடுபாடும் கவனமும் தேவை .இந்த பசுமைக் கூடாரங்கள்வறண்ட மற்றும் கலப்பு காலநிலை மண்டலங்களுக்கு ஏற்றவகை ஆகும்.
உயர் நுட்ப பசுமைகூடம்
மித நுட்ப பசுமைக் கூடத்தில் உள்ள ஒரு சில பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு அனைத்து கருவிகளையும் தன்னியக்க முறையில் இயங்கி சுற்றுப்புற பண்புகள் கட்டுப்படுத்த இந்த பசுமை கூட ம் பயன்படுகிறது பசுமை குடில் மூலம் அனைத்து வகையான தாவரங்களையும் பயிர்களை வளர்க்கலாம். அதாவது பருவ நிலைக்கு ஏற்ப பயிர்களை பயிர் செய்தால் அதிக மகசூல் பெறலாம்.