பசுமைக்குடில் காய்கறிகளை தாக்கும் நூற்புழுக்கள்: கட்டுப்படுத்தும் எளிய வழிமுறைகள்!

திறந்தவெளி சாகுபடியை காட்டிலும் பசுமைகுடில் சாகுபடி மூலம் குறைந்த பரப்பில் அதிக மகசூலோடு (Yield) தரமான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும். ஆண்டு முழுவதும் காய்கறி உற்பத்தி செய்ய முடிவதோடு ஏற்றுமதிக்கான வாய்ப்பை பெறலாம். குடிலில் நிலவும் மிதமான தட்ப வெப்ப நிலையாலும் தொடர்ந்து பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் நன்மை செய்யும் ஜீவராசிகள் அழிகின்றன. சொட்டு நீர் பாசனத்தின் (Drip Irrigation) மூலம் வேர்ப்பகுதியை சுற்றிலும் தொடர்ந்து கிடைக்கிறது என்றார்.

ஈரப்பதம்
ஈரப்பதம் நுாற்புழுக்களின் தாக்குதலுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. 10 முதல் 30 மடங்கு அதிகமாக காணப்படும். இதனால் 40 முதல் 60 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

காய்கறி பயிர்களை வேர்முடிச்சு மற்றும் மொச்சை வடிவ நுாற்புழுக்கள் தாக்கி அழிக்கின்றன. சில நேரங்களில் நூற்புழுக்கள் வாடல் நோயை உண்டாக்கக்கூடிய பியூசோரியம் என்றழைக்கப்படும் பூஞ்சாணத்துடன் இணைந்து கூட்டு நோயை உருவாக்குவதால் செடிகள் இளம் பருவத்திலேயே காய்ந்து மடிந்து விடுகிறது. வேர்முடிச்சு நுாற்புழுக்களால் பாதிக்கப்பட்ட செடிகள் குட்டையாக காணப்படும். செடிகளின் முதன்மை, பக்கவாட்டு வேர்ப்பகுதியில் முடிச்சுகளை ஏற்படுத்துகிறது. இதனால் இளம் செடிகள் மடிகிறது மற்றும்

கட்டுப்படுத்தும் முறை
பாதிப்படைந்த செடியின் பாகங்கள், களைச் செடிகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். மண் பரிசோதனை (Soil Test) செய்து உரமிட வேண்டும். நாற்றுக்கள் உற்பத்தி செய்வதற்கென பயன்படுத்தும் வளர் ஊடகங்களில் ஒரு டன் மண்ணிற்கு சூடோமோனஸ் புளூரசென்ஸ் ஒரு கிலோ, ட்ரைக்கோடெர்மா ஹர்சியானம் ஒரு கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ இடுவதன் மூலம் நுாற்புழுக்களால் பாதிப்படையாத காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்து நடவுக்கு பயன்படுத்தலாம் எனவே

கிலோ மண்ணிற்கு எதிர் நுண்ணுயிரியான பர்புரியோசிலியம் லீலாஸினம் 10 கிராம் கலந்து நுாற்புழுக்களை கட்டுப்படுத்தலாம். தாக்கம் அதிகமாக காணப்படும் போது மீத்தம் சோடியம் 30 மி.லி., வேப்பம் புண்ணாக்கு 500 கிராம் மற்றும் பர்புரியோசிலியம் லீலாஸினம் 50 கிராம் மண்ணில் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories