கோடை காலத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் பாதிப்பு அதிகமாக ஏற்படும். இதனால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே கோடை காலத்தில் மேற்கொள்ளவேண்டிய தொழில்நுட்பம் குறித்து பார்ப்போம்.
பட்டுப்புழு அதிக வெப்பத்தை தாங்கிக் கொள்ளாது. புழு வளர்ப்பு அறைக்குள் வெப்ப நிலையை குறைப்பதன் மூலமு வெற்றிகரமான பட்டுக்கூடு அறுவடை பெறமுடியும்.
கோடைக்காலத்தில் பாக்டீரியாவால் ஏற்படும் பிளாக் சரி எனப்படும் நோய் அதிகமாக தாக்குகிறது. சில சமயங்களில் வாழ்வு எனப்படும் வைரஸ் கிருமி மூலம் சரி நோயும் ஏற்படுகிறது.
நோய்களை கட்டுப்படுத்தும் முறை:
பிளாசிரி நோய் தாகத்தை கட்டுப்படுத்தும் வாடிய இலையை பட்டுப் புழுக்களுக்கு உணவாக கொடுக்கக்கூடாது.
தூசி , மண் படிந்த இலைகளை உணவாக கொடுக்காமல், தூய்மையான இலைகளை அளிக்க வேண்டும்.
புழு வளர்ப்பு அறையில் சரியான காற்றோட்ட வசதி ஏற்படுத்த வேண்டும். அங்கு வெப்பநிலை குறைவாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.
அதாவது புழு வளர்ப்பு அறையின் மேற்கூரை தென்னை அல்லது பனை ஓலையால் அமைக்கப்பட வேண்டும்.
இந்த மேற்கூரை அமைக்கப்படாமல் இருந்தால் அறையின் உள்ளே வெப்பம் தாங்காமல் இருக்க கூரையின் மேற்புறம் அல்லது உட்புறம் ஓலையால் வேயப்பட்ட வேண்டும்.
புழு வளர்ப்பு அறையின் ஜன்னல்களை பகல் நேரங்களில் தொங்கவிட வேண்டும். இதன் மூலம் வெப்பக் காற்று அறைக்குள் வராமல் தடுக்கப்படும்.
இதேபோல் மழையின் உட்புறமாக சுவர் ஓரங்களில் மணல் குவித்து தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இந்த ஈரப்பதம் மூலமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவும்.
பராமரிப்பு:
பொதுவாக ஒவ்வொரு தோலுரிப்புக்கு பின்னர் புழுகளுக்கு உணவு அளிக்கப்படுகிறது.
தோலுரிப்பு முடிந்து வெளிவரும் புழுகளுக்கு முதல்முறையாக உணவளிக்கும் போது நீர்ச்சத்து அதிகம் உள்ள கொழுந்து இலைகளை கொடுத்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
இதையடுத்து முழுதண்டை உணவாக அளிக்கலாம்.
தோட்டத்திலேயே இலைகள் வாடியுள்ள நிலையில் அதனை அறுவடை செய்து தண்ணீரில் நனைத்து நன்கு உதறிய பின் உணவளிக்கலாம்.
இந்த முறைகளை கையாண்டால் பட்டுப்புழு வளர்ப்பில் அதிக லாபத்தை பெறலாம்.