கோடைக்காலத்தில் பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழு அதிக வெப்பத்தை தாங்கிக் கொள்ளாது. புழு வளர்ப்பு அறைக்குள் வெப்பநிலையை குறைப்பதன் மூலம் வெற்றிகரமான பட்டுப்புழு அறுவடை பெற முடியும்

கோடைக்காலத்தில் பாக்டீரியாவால் ஏற்படும்ப்ளாசாரி எனப்படும் நோய் அதிகமாக தாக்குகிறது சில சமயங்களில் பால் புழு எனப்படும் வைரஸ் கிருமி மூலம் தினசரி நோயும் ஏற்படுகிறது

நோய்களைக் கட்டுப்படுத்தும் முறை

ப்ளாசாரி நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வாடிய இலையை பட்டுப் புழுக்களுக்கு உணவாக கொடுக்கக்கூடாது

தூசி, மண் படிந்தஇலைகளை உணவாக கொடுக்காமல் தூய்மையான இலைகளையே அளிக்க வேண்டும்

புழு வளர்ப்பு அறையில் சரியான காற்றோட்ட வசதி ஏற்படுத்த வேண்டும் அங்கு வெப்பநிலை குறைவாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.

அதாவது புழு வளர்ப்பு அறையின் மேற்கூரை தென்னை அல்லது பனை ஓலையால் அமைக்கப்படவேண்டும்

இந்த மேற்கூரை அமைக்க படாமல் இருந்தால் அறையின் உள்ளே வெப்பம் தாங்காமல் இருக்க கூரையின் மேற்புறம் அல்லது உட்புறம் ஓலையால் வேயப்பட்ட வேண்டும்.

புழு வளர்ப்பு அறையின் ஜன்னல்களில் ஈர சாக்குகளைபகல் நேரங்களில் தொங்கவிட வேண்டும் இதன் மூலம் வெப்ப காற்று அறையில்வராமல் தடுக்க முடியும்

அறையின்உட்பகுதியில் சுவரோரம் மணல் குவித்து தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் .இந்த ஈரப்பதம் மூலமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories